பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாங்கள் வந்த காலத்தில் கேள்விப்பட்ட விஷயங்களையெல்லாம் தொகுத்து எழுதியிருக்கின்றனர். அக்காலத்திலேயே புத்தர் தெய்வ புரு பகிவிட்டார், மக்கள் அவர் சிலைகளை வைத்து வணங்கி வந்தனர். போதிய சரித்திர ஆதாரங்கள் கிடைக்காத நிலையில், சில மேலை நாட்டு ஆசிரியர்கள் புத்தர் என்று ஒருவர் இருந்ததேயில்லையோ யென்று சந்தேகமும் கொண்டனர்! ஆனால் பாலி மொழியிலுள்ள திரிபிடகம்' என்ற பெளத்தத் இருமுறைகளிலே பல அச்சாகி வெளிவரவும், ஐரோப்பிய ஆசிரியர் பலர் அரும்பாடுபட்டு அவைகளை ஆங்கிலம் முதலிய மொழிகளில் பெயர்த்து வெளியிடவும் வாய்ப்புக் கிடைத்தபோது, அத்திருமுறைகளிலிருந்து ஒரளவு சரித்திரத்தை அறிய முடிந்தது. இந்தியப் புதைப்பொருள் ஆராய்ச்சியின் மூலமும் சில உண்மைகள் தெரிந்துள்ளன. பர்மா, இலங்கை, திபேத்து முதலிய நாடுகளிலிருந்து கிடைத்த பாலிமொழி நூல்களிலிருந்தும், வடமொழி நூல்களின் சீனமொழி பெயர்ப்புக்களிலிருந்தும் பல விஷயங்களை அறிய முடிகின்றது. புத்தர் பிறந்ததிலிருந்து, ஞானமடைந்து, பல்லாண்டுகள் சமயப் பிரச்சாரம் செய்து வந்தபின்பு சுமார் 25 ஆண்டுகட்கு மட்டுமே வரலாற்று விவரம் தெரியவில்லை. அதற்கும் அப்பால் அந்திய காலத்தில், அவர் நாலந்தா, பாடலிகாமம்’ வைசாலி, அம்பகாமம், ஜம்புகாமம், போகநகரம் முதலிய நகரங்கள், கிராமங்களின் வழியே சென்று, பாவர் நகரில் சந்தன் என்னும் பொற்கொல்லன் வீட்டில் விருந்துண்டு, முடிவில் (குசி) நகரை அடைந்து இவ்வுலகை நீத்து மகா-பரி-நிருவாணம் எய்தியதும், இறுதியாக அவர் சீடர்களுக்குச் செய்த உபதேசங்களும் திருமுறைகளில் தீத நிகாயம்' என்னும் பிற்பகுதியில் மகா-பரி. நிருவான சூத்திரத்தில் விவரிக்கப் பெற்றிருக்கின்றன. புத்தர் பெருமான் எந்த இடத்தில் பிறந்தார்? புத்தரின் தந்தையாரான கத்தோதன மன்னரின் தலைநகரான கபில வாஸ்து நகரின் அருகே, உலும்பினித் தோட்டத்தில் அவர் பிறந்தார். அவர் பிறந்ததால், அது உலகத்திற்கே முக்கியமான தலமாயிற்று. அத்தலத்திற்கு யாத்திரை சென்று வழிபட்டு வந்திருப்பர். ஆனால் காலப்போக்கின் மாறுதல்களால்

  • திரிபிடகம்- பிடகம் என்பது பெட்டி அல்லது கூடை எனவே திரிபிடகம் என்பதற்கு மூன்றுவகைப்பெட்டிகள் அல்லது கூடைகள் என்று பொருள். மூவகைப் பிடகங்கள் விநயபிடகம், சுத்தபிடகம், அபிதம்ம பிடகம், 1.விநயபிடகம் பெளத்த சங்கத்தின் ஒழுக்க விதிகளைக் கூறும். 2.சுத்தபிடகம் (சத்த-சூத்திரம்) உபதேசங்களையும் விளக்கங்களையும் கொண்டது. 3. அபிதம்ம பிடகம் பெளத்த தருமத்தின் நுணுக்கமான பிரிவுகளைக் கூறும்.
  • பிற்காலத்துப் பாடலிபுரம்.

ப. ராமஸ்வாமி 0 61