பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபில வாஸ்து நகரும், உலும்பினித் தோட்டமும் மாறிவிட்டன. ரோகிணி நதிக்கரையிலிருந்த கபிலவாஸ்து இப்போது பாழடைந்து கிடக்கின்றது. சுதந்திர இந்தியாவின் உத்தரப்பிரதேசம் என்னும் ராஜ்யத்தில் (பழைய ஐக்கிய மாகாணம்) பிரிட்ஜ்மாங்குஜ் என்ற புகைவண்டி நிலையத்திற்கு அருகிலுள்ள பிப்ரஹவ என்ற நகரே கபில வாஸ்துவாக இருந்தது. இதிலிருந்து 12 மைல் தூரத்திலுள்ள உலும்பினி. இப்போது அதன் பெயர் ரும்மின்தே எனப்படும். இடைக்காலத்தில் உலும்பினி எங்கிருந்தது என்ற விவரமே தெரியாத முறையில், அந்தப் பிரதேசம் முழுவதும் மணல் மேடிட்டிருந்தது. புதை பொருள் ஆராய்ச்சிக்காக அங்கே மண் தோண்டப்பட்ட போது, பல நூற்றாண்டுகளாக, மண்ணுள் மறைந்திருந்த ஒரு கற்றுாண் அகப்பட்டது. அது இடியால் பிளக்கப்பட்டு கீழே சாய்ந்து, பூமிக்குள்ளேயே மூடப்பட்டிருந்தது. அத்துண் அகப்பட்ட பின்னர் அதிலே பொறிக்கப் பெற்றிருந்த மாநில மெல்லாம் மகிழத்தக்க செய்தியொன்று தெரிய வந்தது. 'ஹறித பகவம் ஜாதேதி' ('இங்கே பகவர் பிறந்தார்) என்பதே அதிற் கண்ட வாசகம். அகிலம் புகழும் அசோக சக்கரவர்த்தியால் நிறுத்தப் பெற்ற தூண் அது. புத்தர் மகா பரி நிருவானமடைந்து சுமார் 225 ஆண்டுகட்குப் பின்பு அரியாசனத்தமர்ந் தவர் அசோகர். சக்கரவர்த்தியாகி இருபது வருடங்களுக்குப் பின்பு அவர் புத்தரிடம் கொண்ட பக்திப் பெருங்காதலால் பெளத்தத் திருப்பதிகளுக் கெல்லாம் யாத்திரை சென்றார். அப்போது நடப்பெற்ற துானே அது. அசோகருடன் அவருடைய பெளத்த குருவான உபகுப்தரும் சென்றிருந்தார். உபகுப்தர், 'வணங்கத் தகுந்த புனிதர் பிறந்த இடம் இதுவே என்று சுட்டிக் காட்டியிருப்பார். ததாகதரின் மாட்சியை யெண்ணிக் காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கி நின்ற அசோகர், அந்த இடத்திலே அங்கமெல்லாம் தேயும்படி வீழ்ந்து வணங்கியிருப்பார். அந்த இடம் உலகுக்கெல்லாம் விளங்கித் தெரியும்படி அவர், தமது வழக்கம்போல, அழகியது.ானொன்றை அங்கே நட்டு வைத்தார். இந்தத் தூண் அகப்பட்டிராவிட்டால், உலும்பினியையும், அங்கு மாதரசி மாயாதேவி புத்தரைப் பெற்றெடுத்த இடத்தையும் நாம் தெரிந்திருக்க முடியாது. அசோகருக்குப் பிரியதரிசி என்றும், 'தேவனாம் பிரியதரிசி _ என்றும் பட்டங்களுண்டு. 'பிரியதரிசி என்பதைப் பியதாஸா' என்று சாசனங்கள் குறிக்கும். உலும்பினித் துணிலுள்ள அசோக சாசனம் வருமாறு: 'மாட்சிமை தக்கிய பியதாஸ் மன்னர் தமது ஆட்சியின் இருபத்தோராம் ஆண்டில் நேரில் (இங்கு) வந்து வணங்கினார். சாக்கிய

  • பிரியதரிசி - பார்வைக்கு இனியவர். ** தேவனாம் பிரியதரிசி - தேவர்களின் காட்சிக்கு இனியவர்.

62 0 புத்த ஞாயிறு