பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனிவர் புத்தர் இங்கே பிறந்ததால், கல்லால் குதிரையொன்று செய்து ஒரு துணின்மேல் நிறுத்தும்படி அவர் ஏற்பாடு செய்தார். வணங்கத்தகுந்த புத்தர் பிறந்த இடமாதலால், உலும்பினிக் கிராமம் தீர்வை செலுத்த வேண்டியதில்லை யென்றும் மன்னரின் தயாள தருமங்களில் அதுவும் பங்கு கொள்ளும்படியும் உத்தரவிடப் பெற்றது. உலும்பினியிலுள்ள பெரிய ஆலயத்தில் புத்தரின் அவதாரச் த்ெதிரத்தை யாத்திரிகர்கள்கண்டு வியந்து பாராட்டுகின்றனர். 'ஒரு மயத்தின் கிளையைப் பிடித்த வண்ணம் மாயாதேவி புனிதக் குழந்தையின் பக்கத்தில் நிமிர்ந்து, நின்று கொண்டிருப்பது பார்க்க ஆச்சரியமாயுள்ளது. " இனி, புத்தர் அவதரித்த ஆண்டைக் கவனிப்போம். ஆழ்வார்கள். நாயன்மார்கள், காலங்களைப் பற்றிக் கூறுவதில் பக்தர்கள் கலியுக ஆரம்பத்தையோ, அல்லது அதற்கு முந்திய யுகங்களையோ குறிப்பிடும் வழக்கத்தைப் போல், புத்தர் காலத்தையும் பக்தர்கள் 1,000 அல்லது 2,000 ஆண்டுகட்கு முற்பட்டதாகக் கூறுவர். சீனாவிலும், மற்ற வெளி நாடுகளிலும் மிகமிகப் புராதனமான காலமாகவே கணக்கிட்டு எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சரித்திர ஆசிரியர்கள் தம் ஆராய்ச்சியின் மூலம் ஓரளவு உண்மையான காலத்திற்கு அருகே வந்துவிட்டனர். சிலர் புத்தர் பிறந்த ஆண்டு கி.மு. 623 என்றும், சிலர் கி.மு.563 என்றும் கூறியிருக்கின்றனர். பெரும்பாலான பெளத்தர்கள் புத்தர் இன்றைக்கு 2500 ஆண்டுகட்கு முன்பு அவதரித்தவர் என்றும், கி.பி.1956-ம் ஆண்டுடன் அவர் தோன்றி இருபத்தைந்து நூற்றாண்டுகள் முடிவடைவதால் இவ்வாண்டு மிகச்சிறப்புடையது என்றும் கருதுகின்றனர். ஆயினும் சில முக்கியமான காரணங்களைக்கொண்டுகி.மு.573-ம் ஆண்டே புத்தர் அவதரித்த காலமாக இருக்க வேண்டுமென்று கருதலாம். இது துணுக்கமான ஆராய்ச்சிக்கு உரிய விஷயம். புத்தர் பிறந்த நாள் வைகாசி பூர்ணிமை. இருபத்தி ஒன்பதாவது வயதில் அவர்துறவு பூண்டதும் வைகாசிப் பூர்ணிமையில், ஆறு வருடம் அருந்தவஞ் செய்து, முப்பத்தைந்தாவது வயதில் அவர் ஞானமடைந்து புத்தரான நன்னாளும் வைகாசிப் பூர்ணிமை 45 ஆண்டுகள் அவர் யாத்திரைகள் சென்று, தருமப் பிரச்சாரம் செய்து, கடைசியாகத் தமது எண்பதாவது வயதில் மகா-பரி- நிருவாணமடைந்ததும் வைகாசிப் பூர்ணிமையன்று. எனவே அவருடைய வாழ்க்கையின் முக்கிய நிகழ்ச்சிகள் நான்கும் வைகாசிப் பூர்ணிமையிலேயே நடந்தேறியிருக் கின்றன. பழைய திருமுறைகளிலும், வேறு நூல்களிலும், அவர் பிறந்த ஆண்டு மட்டும் துல்லியமாகக் குறிப்பிடப்படவில்லை. கி.மு முதலாவது நூற்றாண்டிலிருந்து ஆறாவது நூற்றாண்டுவரை எந்த

  • திரு. எம். ராதாகிருஷ்ண பிள்ளை.

ப. ராமஸ்வாமி