பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டுகளிலும் மேலே குறித்த நான்கு வைகாசிப் பூர்ணிமைகளும் ஒத்து வருகின்றனவோ, அவையே வரலாற்றுக்குப் பொருத்தமானவை. கி.மு.623, 563 முதலிய ஆண்டுகளில் அவர் பிறந்தாரெனக் கொண்டால், இந்த நிகழ்ச்சிகள் நான்கும் பொருந்தவில்லை. 'புத்தர் பெருமானைத் தமிழிற் காட்டும் ஒரு மணி நிலையம்' என்று புகழப்பெறும் 'மணிமேகலை புத்தர் அவதரித்த ஆண்டு 1616 (ஈரெண்ணுற்றொடு ஈரெட்டாண்டில்) என்று கூறியுள்ளது. இவ்வாண்டு எந்த சகாப்தத்தைச் சேர்ந்தது என்பது விளங்கவில்லை. மகா மகோபாத்தியாய திரு. உ.வே.சாமிநாய ஐயரவர்கள், கெளதம புத்தர் பிறந்த தினம் ஈசான சகாப்தம், 68-ம் வருஷம், வைகாசி மாதத்திற் பூர்ணிமையும் விசாக நட்சத்திரமும் கூடிய வெள்ளிக் கிழமையென்று சொல்லுவர்" என்று குறித்துள்ளார்கள். ஈசான சகாப்தம் எப்போது, எவர் காலத்தில் ஆரம்பித்ததென்று தெரியவில்லை. நெல்லை ஜில்லாவைச் சேர்ந்த தமிழறிஞரும், பஞ்சாங்க கணிதத்தில் விசேஷ ஆராய்ச்சியும், அநுபவமும் பெற்ற திரு.இ.மு.சுப்பிரமணிய பிள்ளையவர்கள், மேலே குறித்த நான்கு நிகழ்ச்சிகளையும் ஆதாரமாய்க் கொண்டு, புத்தர் காலத்தைத் தீர்மானித்து வெளியிட்டிருக்கிறார்கள். அவர்களுடைய ஆராய்ச்சியின்படி தெரிந்துள்ள தேதிகளும் விவரங்களும் வருமாறு: 1. புத்தர் பிறந்த நாள் - கி.மு. 573, வைகாசி மீ", 3-ம் தேதி, வெள்ளிக்கிழமை, பூர்ணிமை. 2. அவர் அரண்மனையைவிட்டு வனம் சென்ற நாள் - கி.மு.5:15, வைகாசி, மீ, 24-ம் தேதி, வெள்ளிக்கிழமை, பூர்ணிமை. 3. அவர் புத்த கயையில் போதி மரத்தடியில் ஞானமடைந்த நாள் கி.மு.538, வைகாசி மீ, 6-ம் தேதி, புதன்கிழமை, பூர்னிமை. 4. அவர் குசீநகரில் மகா-பரி-நிருவாணமடைந்த நாள் - கி.மு.193. வைகாசி மீ, 19-ம் தேதி, செவ்வாய்க் கிழமை, பூர்ணிமை. இந்த முடிபுகளைச் சரித்திரமும், இலங்கைத் "தீப வம்ச 'மும், 'மகா வம்சமும் அரண் செய்கின்றன. இவைகளை ஆதாரமாகக் கொண்டால், சந்திரகுப்தர், பிந்துசாரர், அசோகர் முதலியோருடைய ஆட்சிக் காலங்களைப் பற்றியும் துல்லியமாய்க் கணக்கிட முடியும். புத்தரென்றால் பூரண ஞானம் பொலியப் பெற்றவர் என்று பொருள். அவரது இயற்பெயர் சித்தார்த்தர், குடும்பப் பெயர் (கோத்திரப் பெயர்) கெளதமர். தவமிருந்து பேரறிவு பெற்ற பின்பு அவர் புத்தரானார். அவர் +kr புத்த சரித்திரம் 64 புத்த ஞாயிறு