பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மைப் பற்றிப் பின்னால் குறிப்பிடும்.ே ாதெல்லாம் புத்தயென்றோ, ததாகதரென்றோ குறிப்பிட்டு வந்தார். 'ததாகதர் என்றால், முன்னோர் சென்ற வழியிலே செல்பவரென்று பொருள். அவருக்கு முன்னால் பண்டைக்காலத்தில் தோன்றிய புத்தர்களைப் பின்பற்றிச் செல்பவர் அவர். புத்தர் எவரென்பதை அவரே விளக்கியுள்ளார்: 'எவரும் வெல்ல முடியாத வெற்றியையடைந்தவர் புத்தர். இந்த ல்ெ வரும் அணுகமுடியாத வெற்றியை யடைந்தவர் புத்தம் அவர் வல்லையற்ற உணர்வுடையவர், (பிறப்பும், இறப்புமாகிய) பதையற்றவர்." புத்தரும் மனிதரே. எனினும், அவர் தமது பேறிவால் லகத்தின் இயல்பையும், பிறவியெடுத்த எல்லா உயிர்களின் இயல்பையும் உணர்ந்து, நிலையில்லாத உலகில் நிலையான இன் ைெலயில் திளைத்துக் கொண்டிருக்கும் வழியை அறிந்திருந்தார். ஆசைக்காட்.ை அடியோடு அழித்துப் பிறவிக்கு முற்றுப் புள்ளி வைத்திருந்தார். ஆகவே, மானிட உருவிலிருந்துகொண்டே அவர் அழியாத பெருவ|வயெ புத்த நிலையை அடைந்திருந்தார். குயவன் திரிெயைச் கற்றிக் கொண்டேயிருந்து கைகளை எடுத்துவிட்ட பின்பும், பந்திய வேகத்தால் சிறிது நேரம் சுழல்வது போலவே, அவரு ை பிந்திய வாழ்வு இருந்து வந்தது. அவித்தையாகிய பேதைமை நீங்கி, வாழ வேண்டுமென்ற ஆசையும் மற்ற ஆசைகளும் போடு அழிந்துவிட்டநிலையில், அவரது உடல் பிரபஞ்சத்தின் பெதிப்படி மூப்படைந்து மாற வேண்டியது மட்டுமே எஞ்சியிருந்தது. பிறவிக்குரிய வழியை அவர் பெருங்கல்லால் அடைத்துவிட்டார். அதுவே அவரது இறுதிப் பிறவி. ஆகவே அந்நிலையில் அவர் மனிதர், தேவர். நாகர் போன்றோரின் நிலையைக் கடந்தவராய் இருந்தார். அவர்கள் அனைவருக்கும் அவரவர் செயல்களுக்குரிய கருமம் வண்டு. நன்மை தீமைகளும், இன்ப துன்பங்களும் உண்டு. புத்தர் இந்த நிலைகளைக் கடந்திருந்தார்.துரோணர் என்றஅந்தணருக்கும்.அவருக்கும் கெம்ந்த முே குறித்துளள உரையாடல் அவர் நிலையை நன்கு விளக்கும் துரோனர். தாங்கள் தேவரா? புத்தர்: இல்லை துரோனர். தாங்கள் கந்தர்வரா? புத்தர்: இல்லை துரோனர். தாங்கள் இயக்கரா? புத்தர்: இல்லை துரோனர். தாங்கள் மனிதரா?

  • தம்மபதம்.

ப. ராமஸ்வாமி o E. :