பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவன். மிகக் கொடிய காய்ச்சல் எது? புத்தர் துவேஷம் தேவன் தலைசிறந்த மருத்துவர் யார்? புத்தர்: புத்தர் தேவன் நெருப்பிலே வேகாததும், நீரில் கரையாததும், காற்றில் சிதையாததும் உலகம் முழுவதையும் சீர்திருத்துவதும் எது? புத்தர் நல்வினையின்பம்! நெருப்பும் நீரும் ஒரு நற்செயல் விளைவிக்கும் இதத்தை(இன்பத்தை) அழிக்க முடியாது. அது அனைத்துலகையும் சீர்திருத்தும். உலகில் பிறத்தலும், மூத்தலும், பிணிபட்டு இரங்கலும், இறத்தலும்' ஆகிய எல்லாம் துக்கமயமாக இருப்பதைப் புத்தர் பார்த்தார். 29 வயது வரை கற்க வேண்டியவை அனைத்தையும் கற்று, துய்க்கவேண்டிய இன்பங்களனைத்தையும் துய்த்து வந்தவர், துக்கத்தைத் தவிர உலகில் வேறு எதுவுமில்லையென்று கண்டார்; இன்பமாகத் தோன்றியவைகளும் துக்கத்தின் தோற்றங்களென்று உணர்ந்தார். ஆறு வருடம் அடவியிலே தங்கித் தவம் செய்து பார்த்தார். முடிவில் வைராக்கியத்தோடு உண்மையை அறிந்தாலொழிய எழுவதில்லையென்று ஒர் அ " மரத்தடியில் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். ஞானம் உதயமாயிற்று. துக்கத்தைப்பற்றிய விவரங்கள்.அனைத்தும் புலனாயின. அதன் காரணம் அதை நீக்குதல், அதை நீக்கும் வழி ஆகியவை புலனாயின. இவற்றையே அவர் உலகுக்கு வெளியிட்டார். இவற்றைத்துக்கம், துக்க காரணம், துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கம் ஆகிய நான்கு வாய்மைகள் என்று அவர் குறிப்பிட்டார். துக்கம் என்ற நோயின் காரணம் யாது? மனிதனின் தன்மைகளை யெல்லாம் சாரமாகப் பிழிந்து பார்த்தால், 'இது வேண்டும், அது வேண்டும் என்ற ஆயிரக்கணக்கான சேவைகள் அவனுக்கு இரு ப்பதைக் காணலாம். முதலில் நான் என்ற அகத்தைப் படைத்துக் கொள்கிறான். அந்த நான் எத்தனையோ தேவைகளுள்ளது. வாழ வேண்டுமென்ற ஆசை முதலாக, அதன் சுயநலமான ஆசைகளும் வெறுப்புக்களும் (இராகத்துவேஷங்களும்) அளவற்றவை ஆசைகள் காரணமாகவே துக்கம் வந்து சேருகின்றது. முதலில் நான் என்ற ஆணவம் எத்தன்மையது என்பதைப் பார்ப்போம். உலகில் எந்தப் பொருளாவது நிலையாக இருக்கிறது ? இல்லை, ஒவ்வொரு கணத்திலும் ஒவ்வொன்றும் மாறிக் கொண்டேயிருக்கிறது. தோற்றமும் மாற்றமும் மாறி மாறி நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. அழிவு, அல்லது மரணம் என்பது ஒரு 72 புத்த ஞாயிறு