பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேதைமை, செய்கை, உணர்வே, அருவுரு, வாயில், ஊறே, நகர்வே, வேட்கை, பற்றே, பவமே, தோற்றம், வினைப்பயன்' வாழ்க்கையின் துன்பத்திற்கு மூல காரணம் பிறப்பு. பிறப்புக்குக் காரணம் மேற்கண்ட சார்புகள். இந்தச் சார்புகளை அறுத்து நீக்கிவிட்டதால், பிறப்புமில்லை, இறப்புமில்லை. பிறப்பு இறப்பற்ற இன்பமே நிருவான முக்தி. இந்தச் சார்புகள் ஒன்றையொன்று பற்றிக்கொண்டிருப்பவை, இவைகளின் தொடர்பை அறிந்து, மூலமானதை அறுத்தொழித்தால்தான் பிறவா இன்பம் கிடைக்கும். பேதைமை மீளச் செய்கை மீளும், செய்கை மீள உணர்ச்சி மீளும், உணர்ச்சி மீள அருவுரு மீளும், அருவுரு மீள வாயில் மீளும், வாயில் மீள ஊறு மீளும், ஊறு மீள நுகர்ச்சி மீளும், 4. அருவுரு(நாம ரூபங்கள்): உணர்ச்சி சார்ந்த உயிரும், உடம்பும் இது மன நிகழ்ச்சிகளையும், துல உடலையும் குறிக்கும். 5. வாயில் (வடிடாயதனங்கள்):ஐம்பொறிகளோடு மனத்தையும் சேர்த்து ஆறு பொறிகள். 6. ஊறு (ஸ்பரிசம்): உள்ளமும், மற்றப் பொறிகளும் உலகப் பொருள்களோடு சம்பந்தப்படுதல். 7. நுகர்ச்சி(வேதனை): உணர்வானது புலன்களை நுகர்வதால் ஏற்படுவது ஆறு புலன்களின்மூலம் புற உலக சம்பந்தம் ஏற்படுவதால் தோன்றும் உணர்ச்சிகளின் தொகுதி. 8. வேட்கை (திருஷ்ணை): நுகர்ச்சியை விரும்பி, அது நிரம்பாமல் மேலும் மேலும் விருப்பமடைதல்,புலன்களின் மூலம் இன்பத்தை நாடிக்கொண்டிருத்தல். * 9. பற்று (உபாதானம்): ஒட்டிய அறிவு. இது தவறான கொள்கைகளைப் பற்றிக் கொள்ளக் கூடியது. 10. கருமத் தொகுதி (பவம்): பிறப்புக்கு மூலமான கருமங்களின் தொகுதி. 11. தோற்றம் (பிறப்பு): ஐந்து கந்தங்களும் சேர்ந்து, காரண கரியத் தொடர்புள்ள பகு உருவங்களில் பிறத்தல். 12. வினைப்பயன் (பிணி, மூப்பு, சாக்காடு):பலவகைத் துன்பங்களும், முடிவில் மரணமும். § மணிமேகலை. 76 புத்த ஞாயிறு