பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துக்கம் பற்றிய நான்கு வாய்மைகளையும், துக்கத்தை நீக்கும் வழியாகிய அஷ்டாங்க மார்க்கத்தையும் புத்தர் மக்கள் அனைவருக்கும் உபதேசித்து வந்தார். ஆனால் கோடிக்கணக்கான மக்கள் - வாழ்வின் பல படிகளிலுள்ள மக்கள் - யாவரும், ஆசைகளை அறவே களைந்து, ஏகாந்தமான இடம் தேடித் தியானித்தல் முடியாது என்பதால், அவர் பொதுஜனங்கள் எளிதாகப் பின்பற்றக் கூடிய ஒழுக்க விதிகளை வேறாக வகுத்தார்; வாழ்வு முழுதையுமே ஞானமார்க்கத்திலே கழித்து முக்தியடைய விரும்புவோருக்குக் கடுமையான ஒழுக்க விதிகளையும் அமைத்தார். சமய வாழ்வுக்காக வீட்டைத் துறந்து வெளியேறும் பெளத்தத்துறவிகளுக்குப் பிக்குகள் (பிக்ஷ-க்கள்) என்று பெயர். பிக்குகள் யாவரும் சகோதர பாவத்துடன் ஒன்று சேர்ந்து சங்கமாக வாழ்ந்தனர். புத்தர் அவர்களுடைய குருதேவர் அவர் உபதேசித்த அறவுரைகளின்படி நடப்பதே தருமம்:அத்தருமத்தை முழு மனத்தோடு ஏற்றுக்கொண்டு கடைப்பிடிக்கும் துறவிகளின் கூட்டமே சங்கம். புத்தர், தருமம், சங்கம் ஆகிய மூன்றும் 'மும்முனிகள்.. பெளத்த தருமத்தை ஏற்றுக்கொள்பவர் ஒவ்வொருவரும் புத்தருக்கும், தருமம், சங்கம் ஆகியவற்றிற்கும் கூறும் மூன்று சரணங்களும் 'திரிசரணம் எனப்படும். பிக்குகளுக்கு நான்கு படிகள் அமைக்கப் பெற்றிருந்தன. முதற்படியிலுள்ளவர்கள் நெடுங்காலம் தருமத்தைக் கைக்கொண்டு, ஆணவத்தை விலக்கி, ஐயம், திரிபு, மயக்கங்கள் நீங்கியிருப்பர். இவர்கள் நிருவானமடைவதற்கு முன் ஏழு பிறவிகள் வரை எடுக்க நற்செய்கை: உயிர்க்கொலை, களவு, பிறர்மனை விழைதல், பொறாமை, வெகுளி முதலிய தீமைகளை விளக்கி, நல்லொழுக்கத்துடன் வாழ்தல், நல்வாழ்க்கை: வாழ்வுக்கு வேண்டிய பொருள்களைத் தீயநெறியில் அல்லாமல் நீதிநெறியில் உழைத்துப் பெறுதல். நல்லுக்கம். நன்முயற்சி. இம்முயற்சி நான்கு வகைப்படும். மனத்தில் தீய 'எண்ணங்கள் எழாமற் காத்தல், முன்னால் எழுந்த இழிவான எண்ணங்களை அடக்கிவெல்லுதல், நல்லெண்ணங்கள் உதிப்பதற்கு ஏற்ற வழிகளிலே கருத்து வைத்தல், உதித்த நல்லெண்ணங்களைப் பேணி வளர்த்தல். நற்கடைப்பிடி கருத்துடைமை, உடலைப் பற்றியும். உள்ளத்தைப் பற்றியும். உலக இயற்கை பற்றியும் ஆழ்ந்து சிந்தித்து, ஆராய்ந்து, உண்மையை உணர்ந்து. அதை இடைவிடாது போற்றுதல். நல்லமைதி: உள்ளத்தை ஒருநிலைப்படுத்தல். உண்மையை அறிவதைத் தடுக்கும் ஆசை. துவேஷம் முதலிய தடைகள் யாவும் இதனால் நீங்கும். இன்பமும் தியானமும் நிலைத்துநிற்கும் உள்ளம் அமைதி பெறும்; விருப்பு வெறுப்புக்களற்ற சித்தநிறைவு ஏற்படும். பின்னர் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் அப்பாற்பட்ட விடுதலையான பேரின்ப நிலை ஏற்படும்.) 78 புத்த ஞாயிறு