பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளும் இல்லாதிருக்கையில், அவன் பிரபஞ்சத்தை எந்தப் பொருளைக்கொண்டு படைத்தான்? படைத்தல், காத்தல், அழித்தல் எல்லாம் இறைவனுடைய விளையாட்டு' என்றால், இந்தத் இரு விளையாடலால் கோடி கோடியான உயிர்கள் உலகிலே படும் அவதிகளைப் பார்ப்பவர்கள், அவனைப் பற்றி என்ன கருதுவார்கள்? இப்படி எத்தனை எத்தனையோ கேள்விகள் எழுகின்றன. எனினும், இங்கு முக்கியாகக் கருதத் தக்க விஷயம், மனிதன் எல்லைக்குட்பட்டதன் மன. மொழி, மெய்களால் எல்லையற்ற பரம்பொருளை அறிந்து தெரிந்துகொள்ள முடியாது என்பதே. அறிய முடியாத பொருளிடம் அன்பு கொள்வது எங்ங்னம்? எல்லாம் நம்பிக்கை மூலமே நடக்க வேண்டியிருக்கிறது. நம்பிக்கைக்கு ஆதாரமாயுள்ளது எது? பகுத்தறிவன்று; மனிதனின் கற்பனை, அல்லது அவனே எழுதிய சரித்திரம், அல்லது இறைவனே அருளியதாகக் கூறப்படும் நூலே ஆதாரம் அறிவுக் கதவை அடைத்துவிட்டு, நம்பிக்கைக் கதவைத் திறந்துவிட்டால், அதன் வழியாக எல்லாம் நுழைந்துவிடும். பல தெய்வங்கள், பேய்கள், பூதங்கள், சிறு தெய்வங்கள், சிலைகள் - இவ்வாறு மனிதன் நம்பக்கூடிய விஷயம் எதுவுமே இல்லாமற் போகும். புத்தர் பிரத்தியட்ச வாழ்க்கையை ஆராய்ந்து, அந்த முடிவின் மீதே தமது தருமத்தை அமைத்தார். உலக வாழ்க்கைதுக்கம் அந்தத்துக்கத்தை உயிர்கள் தமது முயற்சியாலேயே நீக்க முடியும்; துக்கமற்ற நிலையே நிருவானம் என்று அவர் போதித்தார். எனவே அவருடைய தருமத்தில் இறைவன் அல்லது பதி என்று கூறப்படும் பரம்பொருளுக்கு அவசியமுமில்லை, இடமுமில்லை. இறைவன், அல்லது பரமான்மாவைப் பற்றிய கொள்கை போன்றதே ஜீவான்மா விஷயமும். ஒவ்வோர் உயிரும் தனி ஆன்மா என்றோ, அ கண்டமான பரசிவ வெள்ளத்தில் உயிர் ஒர் அம்சம் அல்லது துளி என்றோ நம்பிக்கை கொள்ளலாம். பரமான்மாவும் ஜீவான்மாவும் ஒன்றேயென்றும், உலக வாழ்விலிருந்து விடுதலை பெறும் ஜீவான்மா பரமான்மாவோடு இரண்டறக் கலந்து விடுகிறதென்றும் நம்புதல் ஒரு கொள்கை. சில மதங்கள், ஒவ்வொரு மனிதனும் ஒரு தனி ஆன்மாவுடன் வருகிறான், இறக்கும்போது இந்த ஆன்மா, தன் வினைகளுக்குத் தக்கபடி சுவர்க்கத்திற்கோ, நரகத்திற்கோ அனுப்பப்படுகிறது என்றும், அங்கேயே அது நிரந்தராக இருந்து வருமென்றும் கூறும். பெளத்த தருமத்தில் இத்தகைய கோட்பாடுகளில்லை அதில் எதையுமே நம்பி மேற்கொள்ள வேண்டியதில்லை. எதையும் ஆராய்ந்து, அறிவுக்குப் பொருத்தமாயிருந்தால்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். த்தர் சொன்னார் என்பதற்காகக்கூட எதையும் ஒப்புக் கொள்ளக் 80 0 புத்த ஞாயிறு