பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/83

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன்ஆன்மாவா, அநான்மாவா? அவன் உடல் அழியுந்தன்மையது என்பதை எல்லோரும் அறிவர். ஆயினும் அவனுள் அழியாத ஆன்மா ஒன்று இருப்பதாக அவன் எண்ணுகிற7" அதுவும் அடுத்துவனுடைய ஆன்மாவைப் போலில்லாமல், தனித்திருப்பதாக எண்ணுகிறான். உடல் அழிந்து, மனம் அழிந்து, பிரக்குைம் அழிந்த பிறகு எதுவும் மிஞ்சியிருக்கவில்லை என்றும், மனிதனை உருவாக்க ஒன்று சேர்ந்த கந்தங்கள் ஐந்தும் பிரிந்துவிடுகின்றன என்றும் பெளத்த தருமம் கூறுகின்றது. மனிதன் 'நான்' என்று தருதும் உடல், மனம், பிரக்ஞை எதுவும் நின்லயில்லாதபோது, நான்' என்பதும் இல்லையென்று தெளிவாகிறது. மனிதன் தன் குழந்தைப் பருவத்தில் 'நான் என்று கருதியதற்கும், முதுமைப் பருவத்தின் 'நான்' என்று கருதியதற்கும், உருவங்களிலோ, குணங்களிலோ, ந்ைதனைகளிலோ, செயல்களிலோ ஒற்றுமையே யில்லை, என்பது மேசிே கூறப்படுகின்றனது. ஆகவே 'நான் என்ற பெயர் - சொல் மட்டுமே மூன்று நிலைகளிலும் பொதுவாக இருக்கிறதேயன்றி, அது குறிப்பிடும் பொருள் மாறிவிட்டது. நாம் அறிந்துள்ள சகல பொருள்களும் அநித்தியமாயும், எல்லைக்குட்பட்டும் இருப்பதைக் கொண்டு, இதற்கு நேர்மாறான, உண்மையானதும், எல்லையற்றதும்; நித்தியமானதும் எதுவுமே இருக்க முடியாது என்று எப்படி முடிவு கட்டு போலியாகத் தோன்றும் இந்தப் பிரபஞ்சத்தை நிழலாகக் கொண்டால் அந்த நிழல் எதனுடையதோ, அது உண்மையாகத்தானே இருக்க வேண்டும்? ஆனால் அத்தகைய எல்லையற்ற, நித்தியமா" ஒன்றைக் கட்டுப்பாட்டில் அமைந்து கிடக்கும் நாம் எப்படி அறிவது, அதன் விவரங்களை எப்படிக்கூறுவது, அது விளக்கிக் கூற முடியாததாகவே யிருக்க முடியும். புத்தர் அதைப் பற்றி எதுவும் கூற மறுத்து அதைப் பற்றிய ஆராய்ச்சியையும் பயனற்றதன்று என்றி கூறிவிட்டார். ஆயினும் சில சந்தர்ப்பங்களில் அவர் கூறியுள்ள விஷயங்களைக் கொண்டு அவர் கருத்தை ஒரளவு நாம் தெரிந்து கொள்ளலாம். "ஒ பிக்குகளே பிறப்பற்ற, ஆரம்பு22. சிருஷ்டிக்கப்படாத, உருவாகாத ஒன்று இருக்கிறது. அப்படி ஆன்றில்லையானால், பிறப்புள்ள, ஆரம்பமுள்ள, சிருஷ்டிக்கப்பட்ட, உருவுள்ள உலகிலிருந்து தப்பித்துக் கொள்ளவே முடியாமற் போகும்.' என்று அவர் கூறியுள்ளார். அந்த உண்மையான ஒன்றை அந்த நிலையை. யாரும் விளக்கியுரைக்க முடியாது. புத்தரும் அந்த விளக்கத்தை மேற்கொள்ளவில்லை. 'ஒருவன் தானே தனக்குத் தலைவன். வேறு யார் தலைவனாயிருக்க முடியும்?"

  • உதானம், இதி உத்தகம்.

82 8 புத்த ஞாயிறு