பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'ஒருவன் தனக்குத்தானே தலைவன், தனக்குத் தானே புகலிடம்: ஆதலால், வணிகன் உயர்ந்த குதிரையை அடக்கிப் பழக்குவதுபோல, உன்னை நீயே அடக்கிப் பழகவும்' என்று அவர் தம்மபத'த்தில் கூறியுள்ள வாக்கியங்களை ஊன்றிப் பார்த்தால், தானே தனக்குத் தலைவன்' என்பதில் முதல் தான் யார், இாண்டாவது தான் யார் என்பதன் கருத்து விளக்கமாகும். இரண்டும் ஒருவனாக இருக்க முடியாது. நசித்துப் போகக்கூடிய நான் என்ற அகத்தை அகங்காரத்தை - நசித்துப் போகாத மேல் நிலையிலுள்ள ஒன்றால் அடக்க வேண்டுமென்றே அவர் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று அறிஞர் ஆனந்தா குமாரசாமி அபிப்பிராயப்படுகின்றார். தேயவாத பெளத்தர்கள் ஆன்மாவே இல்லையென்று தான் . அநான்பம் என்பதற்குப் பொருள் கூறுவர். புத்தருடைய கருத்துப்படி மாறுதலே யில்லாத நித்திய ஆன்மா இல்லையென்றும், மற்ற உயிர் வெள்ளத்திலிருந்து பிரிந்து தனிப்பண்புள்ள தனி ஆன்மா ஒன்று இல்லையென்றுமே பொருள் கொள்ள வேண்டும். தன்னைத்தான் அடக்குதல், தானே தனக்குச் சரணாலயம், தன் முயற்சியாலேயே நிருவான நிலை பெறுதல் முதலியவைகளைப் பற்றிப் பெருமான் கறியவற்றுள் தான் என்று எதைக் குறிப்பிடுகிறார்? ஒவ்வொரு மனிதனுடைய உள்ளுணர்வையே விஞ்ஞானத்தையே (0ொ8oெப5ாலி அவர் கருதியிருக்கிறார். இதுவும் நித்தியமானதன்று மாறுதலடைந்து கொண்டே வருவது. ஒரு பிறவியிலிருந்து மறு பிறப்புக்குத் தொடர்புடையது. வெளி உலகைப் பற்றிய கொள்கையைப் போலவே பெளத்த தருமத்தில் அக உலகைப்பற்றியும் (ஒழுக்கம் பற்றியும்) கொள்கை அமைந்திருககறது. மனிதனையும் அவன் சேர்ந்துள்ள சமுதாயத்தையும் கொண்டே ஒழுக்க விதிகள் அமைந்திருக்கின்றன. மனிதன் மற்ற மனிதர்களோடு சேர்ந்தே வாழ்ந்து வருவதால், அவன் வளர்ச்சிக்கும் சமுதாய வளர்ச்சிக்கும் பொருந்திய முறையில் அவன் வாழக் கடமைப்பட்டிருக்கிறான். நீதி, நேர்மை, இரக்கம், அன்பு முதலிய பண்புகள் இல்லாவிட்டால், சமுதாயத்தில் வாழ முடியாது, சமுதாயமே சிதறி அழிந்துபோய்விடும். மனிதன் சமுதாயத்தின் ஒர் அங்கமாகவே இருந்துகொண்டு, அதன் ஒழுக்க விதிகளின்படி நடந்து வந்தால்தான். இன்பமடைய முடியும். புத்தர் பெருமான் தாம் மேற்கொண்ட காரியத்தை நன்கு அறிந்திருந்தார். தாம் உலகுக்கு அளிக்க விரும்பிய கபமான செய்தியைத் திட்டவட்டமாகச் சிந்தித்துத் தயாரித்து வைத்திருந்தார். எனவே அதற்கு விபரீதமான எதிலும் மக்களின் மனத்தைத் திருப்ப அவர் விரும்ப ப. ராமஸ்வாமி 0 83