பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வில்லை. திருப்பினால் அவர்கள் அவசியமானதைப் புறக்கணித்து விட்டுத் தேவையற்றவைகளையே நாடி விவாதம் செய்து கொண்டிருப்பார்கள். அதனால்தான் அவர், 'நான் உபதேசிப்பது ஒரே விஷயந்தான், துக்கமும் துக்கத்திலிருந்து விடுதலையும்!" என்று திரும்பத் திரும்பக் கூறி வந்தார். "ஓ பிக்குகளே மகாசமுத்திரம் உப்பின் உவர்ப்பை மட்டுமே செய்து கொண்டிருப்பதுபோல், இந்தத் தருமமும் விடுதலை என்ற ஒரே ருசியைக் கொண்டிருக்கிறது . என்று அவர் வற்புறுத்தி வந்தார். மனிதன் ஆசையை அரிந்து தள்ளி, 'நான் என்னும் அகந்தையை அழித்தலே அவனுடைய முக்திக்கு அழியாத இன்பத்திற்கு வழி என்று அவர் காட்டியுள்ளார். 'ஓ பிக்குகளே! ஒரு மரத்தை மட்டும் வெட்டினால் போதாது. ஆசைக் காட்டையே அரிந்து தள்ளுங்கள் ஆசைக் காட்டிலிருந்தே அபாயம் வருகிறது. காட்டையும் புதர்களையும் வெட்டி வீழ்த்திய பிறகு. நீங்கள் விடுதலை பெறுவீர்கள்.' 'எந்த மனிதன் ("நான் என்ற) தனித்தன்மையை ஒழிக்கும் வகையில் தன் இதயத்தைச் செலுத்துகிறானோ அவன். கங்கையின் பெருவெள்ளத்தில் ஒரு கரையிலிருந்து மறுகரைக்கு அபாயமின்றி நீந்திச் சென்ற பலவானைப்போல், இன்பமாயும், களிப்புடனும், உற்சாகத்துடனும் இருப்பான்.*** புத்தர் மறுபிறப்புப் பற்றியும் தேவர்களைப் பற்றியும், வானுலகம், சுவர்க்கம், நரகம் முதலியவை பற்றியும் கூறியிருக்கிறார். இவ்விஷயங்களில் அவர் கருத்துக்கும் இந்து சமய முறையில் இருந்துவரும் கருத்துக்கும் மிகுந்த வேற்றுமையுண்டு. புத்தர், ஒரு மனிதன் இறந்த பின்பு அவனே மற்றோர் உருவில் பிறப்பதாகச் சொல்லவில்லை. மனிதனுடைய மரண காலத்தில் அவன் உடலாகவும் குணங்களாகவும் ஒன்று சேர்ந்து திகழ்ந்த ஐந்து கந்தங்களும் உலைந்து பிரிந்து போய்விடுகின்றன. அவன் உயிரோடியிருக்கையில் செய்த நல்வினை, தீவினையாகிய கருமங்களெல்லாம் உணர்ச்சி (விஞ்ஞானம்) யென்னும் கந்தத்தில் ஒரு விதைபோல் அடங்கியிருக்கின்றன. அவனுடைய மரணத்திற்குப் பின் மற்ற நான்கு கந்தங்களோடு உணர்ச்சியும் சேர்ந்து மீண்டும் உலகில் பிறக்கும்படி செய்கின்றது. + உதானம் ** தம்மபதம் *** மாலுங்கிய புத்த சூத்திரம் 84 ல் புத்த ஞாயிறு