பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்தியத்தின் முன்னால் கடவுள்களும், பிசாசுகளும், தேவர்களும், அசுரர்களும் நான் என்னும் ஆணவமுள்ள மனிதர்களும் யாவர்களும் விலகிநின்று வழிவிட வேண்டியவர்களே. சத்தியமே வெல்லும் என்று அச்சமயம் பறை சாற்றுகின்றது. பெளத்த சமயம் கூறும் நரகம் பேராசையும் துவேஷமும் நிறைந்த உள்ளமே; சுவர்க்கம் கருணையும் களிப்பும் நிறைந்த உள்ளமேயாம். பெளத்த சமயம் பிற சமயம் எதையும்துவிப்பதில்லை. சமயங்களின் நடுவே சாந்தியைப் பரப்பும் சமயம் அது. மனித சமூகத்தினிடையே, மக்களின் உதிரத்தில் ஒரு சொட்டுக்கூடச் சிந்தாத முறையில், அன்பு வழியிலே பிரசாரம் செய்யப் பெற்ற சமயம் அது. கோசலத்திலே பிறந்து, மகத நாட்டில் பரவி, மாநிலத்தையே அளாவியுள்ள சமயம் அது. சுமார் 50 கோடி மக்கள் அதன் அரவணைப்பில் ஆதரவு பெற்று வருகின்றனர். விஞ்ஞான ஆராய்ச்சியின் முடிபுகளோடு முற்றிலும் பொருத்தமா யுள்ளன. அதன் கோட்பாடுகள். பெளதிக ஆராய்ச்சியும், மனோதத்துவ ஆராய்ச்சியும் வளர்ச்சி பெறாத பண்டைப் பழங்காலத்திலே-2,500 ஆண்டுகட்கு முன்பே - புத்தர் பெருமான் கண்டறிந்து கூறிய உண்மைகளை இன்றைய விஞ்ஞானிகளும் கண்டு அதிசயிக்கின்றனர். பெளத்த சமயம் வைதிக சமயங்களைச் சீர்திருத்தியது: கொலைக்குக் காரணமான யாகங்களை ஒழித்தது; மூடப் பழக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. சமயப் பிரச்சாரத்திற்காகவும், தருமப் பாதுகாப்புக்காகவும் அதுவே உலகில் முதன் முதல் சங்கம் நிறுவியது. அது புரோகிதரும் குருக்களும் இல்லாத சமயம். தருமந்தான் அதன் கடவுள். அதன்படி ஒவ்வொருவருடைய தற்பயிற்சியே பிரார்த்தனை, தன்னலத் தியாகமே தொழுகை. FF வேத, வேத்ாந்தங்கள் தோன்றியதாட்டியே, -வதிகர்களின் நடுவிலே தோன்றி, இத்தகைய புதிதான அருளறத்தைப் பிரச்சாரம் செய்த புத்தர் பெருமானின் அறிவையும், தைரியத்தையும், நிதானத்தையும், அன்பையும், அளவிட்டுரைக்க முடியாது. எல்லையற்ற பெருமை அவருக்கு ஏற்பட்டிருந்ததால், அவரைப் பற்றி ஏராளமான கதைகள் தோன்றுகின்றன. முன் ஜன்மங்களில் அவருடைய வாழ்க்கை எப்படியிருந்தது என்று இக்கதைகள் கூறும். இவைகளுக்கு ஜாதகக் கதைகள் என்று பெயர். இவற்றுள் ஒன்றில் புத்தராய்ப் பிறக்கு முன் போதிசத்துவர் உயர்ந்த அறிவுள்ள ஒரு கிளியாக இருந்தாராம். அப்போது ஒவ்வொரு நாளும் அந்தக்கிளி, வயல்களிலுள்ள நெற்கதிர்களை உண்டுவிட்டுத் தன் அலகில் ஒரு கதிரை எடுத்துக்கொண்டு கூட்டுக்குத் திரும்புவது வழக்கம். அந்தக் கதிரிலுள்ளதானிய மணிகள் எவர்களுக்காக

  • போதிசத்துவர் - புத்த நிலையை அடைவதற்குரியவர்.

86 புத்த ஞாயிறு