பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று கேட்டதற்குக் கிளி பதில் கூறிற்று. 'ஒரு கடனைச் செலுத்துகிறேன், மேற்கொண்டு கடனும் கொடுக்கிறேன்; சேமநிதியும் சேர்த்து வைக்கிறேன் என்பதே அந்தப் பதில். அதன் பெற்றோர்களுக்கு உணவளிப்பது கடனைச் செலுத்துதல்; குஞ்சுகளுக்கு உணவளிப்பது கடன் கொடுத்தல்-பின்னால் அவை திரும்பச் செலுத்துவதற்காக தாமே இரை தேட முடியாத கிளிகளுக்கு உணவளித்தலே சேமநிதி பிற்காலத்திற்கு உதவியான நற்கருமம் அல்லது தருமம். புத்தர் உலக மக்களாகிய குஞ்சுகளுக்குத் தம் அலகில் கொண்டுவந்து அன்போடு அளித்த கதிரே அவருடைய பெளத்த தருமமான சேமநிதி என்று கொள்ளலாம். லாவோத்ளேஸ் மகா ஞானிகளில் மூவர் ஒரே காலத்தில் வாழ்ந்திருந்து உலக சரித்திரத்திலேயே ஒரு விசித்திரமான சம்பவமாகும். இந்தியாவில் புத்தர் அறஆழியை உருட்டிக்கொண்டு, நாடும் நகரும் நடந்து சென்று நல்லுரை புகன்று வந்த அதே காலத்தில், பழம் பெரும் நாடாகிய சீனாவில் லாவோத்ஸேயும், கன்பூஷஸ்-சம் மக்களுக்கு ஞானம் போதித்து வந்தனர். லாவோத்லே கி.மு.279-ல் தோன்றியிருக்க வேண்டுமென்று சில சரித்திர ஆசிரியர்கள் கருதுகின்றனர். கன்பூஷஸ் கி.மு.551-ல் பிறந்து 73-வயது வாழ்ந்திருந்தார். லாவோத்ஸே உலகைத் துறந்து வாழச் சொன்னா ரென்றும், கான்பூஷஸ் உலகில் இருந்து வாழச் சொன்னாரென்றும் அறிஞர் கூறுவர். இருவருக்குமுள்ள முரண்பாட்டை இக்கருத்து தெளிவாகக் காட்டுகின்றது. இந்தியாவைப்போல் சீனா முற்காலத்தில் தத்துவ ஆராய்ச்சியிலும் சமய வாழ்விலும் மூழ்கியிருக்கவில்லை. சீனர்கள், மறுவுலகைப் பார்க்கினும், இவ்வுலக வாழ்க்கையையே அதிகமாய்க் கவனித்து வந்தனர். இயற்கையோடு வாழ்ந்து வந்த அம்மக்கள், வையக வாழ்விலேயே கண்ணுங் கருத்துமாயிருந்து, அதை உயர்ந்த ஒர் கலையாக வளர்த்து வந்தனர். இத்தகைய மக்களிடையே இந்தியாவில் உபநிடதங்களை உரைத்த முனிவர்களைப் போன்றோர் தோன்றுவது அரிது. அப்படி அரிதாய்த் தோன்றியவரே லாவோத்ஸே என்ற ஞானி. உலகம், உயிர், இறை ஆகிய விஷயங்களைப் பற்றி, யாக்ஞவல்ஜியம், உத்தாலகர் முதலிய மகரிஷிகளைப் போலவே, அவரும் துணிந்து ஆராய்ந்தார். அவர் கண்ட உண்மைகள், டாவோ-தெ-கிங்' என்ற நூலில் இருக்கின்றன. அவர் அமைத்த சமயத்தின் பெயர் 'டாவோ'. வினமொழியில் டாவோ என்றால் மார்க்கம் அல்லது வழி என்று பொருள். லாவோத்ஸே யின் தத்துவ ஞானம் பெரும்பாலான ப. ராமஸ்வாமி 87