பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுமக்களிடையே பரவி நிலைக்கும் முறையில்லை. ஆனால் அறிவாளரும், ஆழ்ந்த சிந்தனையாளருமான பலர் அதை மேற்கொண்டனர். தங்கள் குருநாதர் உரைத்த முறைப்படி அவர்கள் உலகைத் துறந்து முனிவர்களாக ஒதுங்கி வாழ்ந்து வந்தனர். அறிந்தவன் பேகை பதில்லை, பேசுவோன் அறிந்தவரிைல்லை h H + a. - அதிகமாக II பத்திரை செய்பவனுக்கு உள்ள அறிவும் சுருங்கிவிடும்.' 'செயல் புரிபவன் அழிக்கிறான். பற்றிக் கொள்பவன் இழக்கிறான். ஆதலால் முனிவன் செயல்புரிவதில்லை; அதனால் அழிப்பதுமில்லை; அவன் (எதையும்) பற்றுவதில்லை; அதனால் இழப்பதுமில்லை. 'பிறரை அறிந்தவன் படிப்பாளி: தன்னை அறிந்தவனே ஞானி.' 'பிறரை வெல்பவன் சதைப் பலமுள்ளவன், தன்னை வெல்பவனே (உண்மையான) பலவான்.' கலங்கிய தண்ணீரை யாரால் தெளியவைக்க முடியும்? ஆனால் அது அசையாமலிருக்கும்படி வைத்திருந்தால், தானாகவே மெல்ல மெல்லத் தெளிந்துவிடும். பூரணமான சாந்தியைப் பெற யாரால் முயற்சி செய்ய முடியும்? ஆனால் காலம் செல்லட்டும். மெல்ல மெல்லச் சாந்தி ஏற்படும்.' "நித்தியமான தருமத்தை (விதியை) அறிவதே மெய்ஞ்ஞானம். இத்தகைய உபதேசங்களால் லாவோத்ஸ்ே உலக வாழ்வில் மூழ்கியிருந்த மக்களை அவர்கள் போக்கிலேயே சென்று கரையேற்ற வேண்டுமென்று உழைத்து வந்தார். உலகப் போக்கை எதிர்த்து நிற்கக்கூடாது என்று அவர் சொல்வதுண்டு. உயர்ந்த மனிதர்கள் தண்ணிரைப்போல் எல்லார்க்கும் உபகாரிகளாயிருந்து, தண்ணிரைப் போலவே போட்டியிடாமல் ஒதுங்கியிருக்க வேண்டுமென்றும் அவர் கூறியுள்ளார். உலகிலுள்ள எல்லாப் பொருள்களிலும், எங்கும், ஒரே உயிர்த் தத்துவம் பரவியிருப்பதாகக் கருதுவது அவர் கொள்கை. பெயரற்ற ஒன்றிலிருந்து வானமும் பூமியும் தோன்றின 88 ைபுத்த ஞாயிறு