பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து.கருத்துக்கு உரை எழுதிய அசுவகோஷர் தாயன்பை நான்கு பிரிவாகக் கூறியுள்ளார். குழவியிடம் தாய்க்குள்ள கவலை. குழவி உடல் ா குன்றினால், அது குணமாக வேண்டுமென்ற கருணை, பையன் வளர்ந்து திறமைகள் பெறுகையில் களிப்புற்றுக் காட்டும் அதுதாபம், அவன் திருமணம் செய்துகொண்டு தனி வீடு செல்லும்போது, அவனை விட்டு ஒதுங்கியிருந்து காட்டும் பரிவு ஆகிய நான்கு நிலைகளையும் நாம் தாயன் பில் காண்கிறோம். இத்தகைய அன்பே உலகை அளாவிப் பரவும்படி, எல்லா உயிர்களையும், போர்த்துக்கொள்ளும்படி, போதிமாதவர் கூறியுள்ளார். 'ஊர்வன, ஒடுவன, இரு கால், நாலு கால், பல கால்களைப் பெற்ற ஜந்துக்கள் யாவும் நமக்குத் தீங்கு செய்யாதிருக்கட்டும்; அவைகளுக்கு நாமும் யாதொரு தீங்கும் செய்யாமலிருப்போம்; நம்முடன் அவைகளெல்லாம் சாந்தியோடு வாழட்டும்' என்றே அவர் போதித்து வந்தார். புத்தரிடம் சொர்க்கமும் இல்லை, நரகமும் இல்லை. அவரது மார்க்கமே புதிதாயிருந்ததால், மக்கள் மனத்தை மயக்குவதற்கேற்ற பழைய புராணங்களும், சாத்திரங்களும் அவரிடம் இல்லை. பிரார்த்தனை செய்வதால் பாவங்கள் ஒழியுமென்றோ, உயிர்களின் துக்கம் ஒழியுமென்றோ அவர் நம்பவில்லை. மக்களின்_துயரம். நீங்க _ வேண்டுமானால், அவரவர்-முயற்சியாலேயே ஆகவேண்டும். - : -- # _ -------- -------—------- _ ---. புறத்திலிருந்து எந்த உதவியும் வாராது. கருமம், காரியமெல்லாம், அகத்தில்ேதான் நிகழ வேண்டும். ஒவ்வொருவர் விதிக்கும் அவரவரே பொறுப்பு. நீயே முயற்சி செய்துஉழைக்க வேண்டும். ததாகதர்கள் உபதேசம் மட்டுமே செய்வார்கள்.' 'ஒ பிக்கு உன்னை நீயே விழிப்படையச் செய்துகொள்: உன்னை நீயே பரிசீலனை செய்துகொள் இவ்வாறு தற்பாது காப்புடனும், கவனத்துடனும், நீ இன்புற்று வாழ்வாய்' தனக்கு அதிபதி தானே, தனக்கு அடைக்கலம் தானே ஆதலால் நல்ல குதிரையை வணிகன் அடக்கி யாள்வதுபோல், உன்னை நீயே அடக்கிக்கொள்.' இவ்வாறுதான் பகவர் உபதேசிக்கிறார். 'ஒருவன் தானே தீமை செய்கிறான், தானே துயருறுகிறான்; தானே தீமையைச் செய்யாது விலக்குகிறான். தானே தன்னைப் புனிதமாக்கிக் கொள்கிறான். புனிதனும் பாவியும் தத்தம் முயற்சியாலேயே வாழ்கின்றனர். அல்லது விiழ்ன்ெறனர்; எவரும் மற்றொருவரைப் பரிசுத்தமாக்க முடியாது. பல்லாயிரம் மனிதர்களைப் போரில் வென்றவனினும் தன்னைத்தான் வென்றவனே தலைசிறந்த வெற்றியாளன்: இதுவே அவர் முடிவு. | - கத காயிறு