பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெயருள்ளதுதான் பல்லாயிரம் ஜந்துக்களைப் பாதுகாத்து அதனதன் இனப்படிவளர்க்கிறது.' 'உண்மையின் ஆசையை அகற்றுபவனே சத்தாயுள்ளவைகளைக் காண முடியும்; ஆசையை ஒருபோதும் அகற்றாதவன் வெளித் தோற்றமான பரிணாமங்களையே பார்க்க முடியும்.' இத்தகைய உபதேசங்கள் உலக வாழ்வில் மக்களுக்கு அசிரத்தையை உண்டாக்கியதில் வியப்பில்லை. இவைகளின் மூலம் அறிவாளர்கள் தம் சிந்தையை அடக்கிச் சும்மா இருக்கும் திறனைப் பெறுவதற்குரிய ப் T அறிந்து கொண்டனர். பொதுமக்கள் வாழ்க்கைப் போராட்டத்தில் தலைகீழாகப் பாய்ந்து கொண்டிருக்கையில், சற்றே நின்று, தங்களையும் தங்கள் சூழ்நிலையையும், உலகத்தையும் பற்றிச் சிந்தித்துப் பார்க்கும்படி இவைகள் தூண்டின. டாவோ சமயத்தின் கொள்கையைப் பிற்காலத்தில் விரிவாக விளக்கியுள்ள அறிஞர் சுவாங்த்ஸ்-, 1,600 ஆண்டுகட்கு முன்பு இவ்வாறு எழுதியுள்ளார். 'அந்தத் தத்துவம் இதிலுளதா.அதிலுளதா என்று கேளாதீர். அது உயிர் அனைத்திலுமுளது. எல்லாப் பொருள்களும் அளவுக்குட் பட்டிருக்க வேண்டும் என்று அது விதித்துளது. ஆனால் தான் மட்டும் அளவற்றதாய், எல்லையற்றதாயுளது. அதுவே காரணங்களுக்கும் கருத்தாவாயுள்ளது. ஆனால் அது காரணங்களும் காரியங்களு மன்று. எல்லாம் அதிலிருந்தே தோன்றுகின்றன. அதன் ஆதிக்கியத்திலேயே உள்ளன.' கன்பூஷஸ் கன்பூஷஸ், கண்முன்புள்ள வாழ்க்கையைத் தவிர, காணாத விஷயங்களில் கருத்தைச் செலுத்திக் கற்பனை செய்யவில்லை. வாழ்வுக்கு அடிப்படையான விசுவாசம், மரியாதை, நிதானம், கற்பு, பலாத்காரத்தை அழித்து அன்பு கொள்ளுதல் முதலிய ஒழுக்கங்களையும் அறத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியலை யுமே அவர் முக்கியமாகக்கொண்டார். அவர் எந்த மதத்தையும் உண்டாக்கவில்லை, ஆனால் அவருடைய உபதேசங்களை ஜனங்கள் பின்பற்றி வந்ததில், அவையெல்லாம் சேர்ந்து ஒரு சமயமாகிவிட்டது. மக்களின் ஒழுக்கமே

  • மற்ற ஆசைகளைக் கைவிடுதல் போல உண்மை மீதுள்ள ஆசையையும்

உதறவேண்டும் என்று கூறுகிறார் ப. ராமஸ்வாமி 89