பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைவ, என் இறைவ! நீ ஏன் என்னைக் கைவிட்டுவிட் ոսն» օ-հա கடைசியாகக் கேட்டார். தம்மைச் சிலுவையிலே இழி மரணமடையும் படி விடாமல், ஆண்டவன் குறுக்கிட்டு இனிது காப்பானென்று அவர் முன்னால் எண்ணியிருந்தார். ஆனால் அவருடைய ஆண்டவன் அவர் நினைத்த வழியிலன்றி, அவர் மரணத்தின் மூலமே அவரை நித்தியான தேவகுமரராக்க எண்ணியிருந்தான் போலும் முடிவில் 'ஏகநாதர், 'முடிந்து விட்டது தந்தாய், உன் திருக்கரங்களில் எனது ஆவியை ஒப்படைக்கிறேன்! என்று கூறினார். மரக்கட்டையிலே உ லாகிய கூட்டைத் தொங்க விட்டுவிட்டுப் பறவை பறந்து போய்விட் , ! ஆயினும் 'என் தந்தாய்! உனது திருவுளப்படியே நடக்கட்டும் என் எண்ணப்படியன்று, ஆனால் உனது திருவுளமே!’ என்று கிறிஸ்து கூறிவந்த பிரார்த்தனை மட்டும் உலகில் நிலைத்துவிட் து. இவ்வரலாறுகளிலிருந்து அவருடைய கடவுள்-வெறி.பக்தி-தெளிவாய்த் துலங்குகின்றது. ஏசுநாதரின் உபதேசங்களிற் சில வருமாறு: 'நம் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே. உங்கள் ஆண்டவரை உங்கள் முழு இதயத்தாலும், முழு ஆவியினாலும், முழு உள்ளத்தாலும். முழு வலிமையாலும் நேசியுங்கள் இவைகளைவிட உயர்ந்த கற்பைன எதுவுமில்லை." 'கடவுளின் இராஜ்யம் கண்ணுக்குப் புலனாகும் உருவத்தில் தோன்றுமென்று எண்ணாதீர்கள். பரம ராஜ்யதைப் பார்க்க முடியாது அது இங்கே யிருக்கிறது. அல்லது அங்கேயிருக்கிறது என்று உங்களிடம் சொல்வார்கள். அதைப் பின்பற்றிச் செல்லாதீர்கள் பரமராஜ்யம் ஒரு குறித்த காலம் அல்லது இடத்திலில்லை. அது எங்கும் உளதாயும், இலதாயு முள்ளது - ஏனெனில் அது உங்களுக்குள்ளேயே, உங்கள் ஆன்மாக்களிலேயே அமைந்திருக்கிறது.' "... கடவுள் மனிதர்களிடையே தமது சக்தியைக் கொண்டு பரமராஜ்யத்தை அமைப்பதில்லை. ஆனால் ஜனங்கள் தாங்களாகவே அதை அமைத்துக்கொள்ளும்படி விட்டுவிடுகிறார்.' "எல்லர் மனிதர்களும் ஒரே தந்தையின் மக்கள். எ ல்லோரும் சகோதரர்கள். ஆதலால் நீங்கள் ஒவ்வொருவரையும் சமமாக நேசிக்க வேண்டும்.' ப. ராமஸ்வாமி ம 97