பக்கம்:புத்த ஞாயிறு.pdf/104

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


102 புத்த ஞாயிறு

சுகுளு: தெய்வமே என்னவோ ஒர் உணர்ச்சிப் பட படப்பு...எதையோ நினைத்துக் கொண்டு பேசி வந்ததை மறந்துவிட்டேன். திராட்சைத் தோட்டம் தொடர் கதை அத்தியாயங்களுக்காக, இந்தப் பள்ளத்தாக்கி லுள்ள தோட்டங்களைச் சுற்றிப் பார்க்க அல்லவா வந்தோம்?

குமாரகவி நினைவு வந்து விட்டதா? காரை எடுத்துக் கொண்டு போக வேண்டியதுதானே? உன்னுடைய வர்ணனை...உண்மையான காட்சியை விடவும் உயர்தர மானதாகத்தானே இருக்கும்! புறப்படுவோமே!

(சுகுளு, காரை எடுத்துக் கொண்டு வருகிருள். கைத் தாங்கலாக குமாரகவியையும் முன்புற இருக்கைக்கு ஏற்றி

அமர வைக்கிருள். கார் புறப்படுகிறது.)

சுகுளு: இன்று நீங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறீர் கள் தெய்வமே! நம்முடைய திருமணத்துக்குப் பின்னர் அதிக அளவு உற்சாகத்தை மீண்டும் உங்களிடம் இப்போதுதான் பார்க்கிறேன்.

குமாரகவி: அப்படியா! நீ சொன்னல் சரிதான். இப்போது எங்கே வந்து கொண்டிருக்கிருேம்...நீ காட்சி வருணனையைத் தொடங்கலாமே!

.சுகுளு: இதோ தொடங்கிவிட்டேன்...கன்னங்கரேலென்று கொத்துக் கொத்தாகக் கறுப்புத் திராட்சைக் குலைகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. மிக நீண்டவெள்ளைத் திராட்சைக் குலைகளும் ஆங்காங்கே தெரிகின்ற்ன. நடு நடுவே ளில்வர் ஒக்ஸ் மரங்களைக் கட்டை கட்டை யாகக் கத்தரித்து விட்டு-அவற்றைத் தூண்களாகக் கொண்டு மூங்கில் பிளாச்சுக்களால் பந்தல் வேய்ந் திருக்கிருர்கள். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இந்தப் பந்தல்களில் படர்ந்திருக்கிற பச்சைக் கொடி களின் அழகும் இலைகளின் அழகும் அவற்றுக்கு மேலே,