பக்கம்:புத்த ஞாயிறு.pdf/107

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நா. பார்த்தசாரதி - 105

வழிப்பட்ட வாழ்க்கையையும் சிறிது நினைவில் கொள்ள வேண்டும்... -

சுகுளு: சரி...இன்னும் ஏதாவது சொல்ல மீதம் இருக்

கிறதா, தெய்வமே...? -

குமாரகவி நிறையவே இருக்கிறது... மனம் விகாரப் படாமல் இப்போது நான் சொல்வதை அப்படியே கேட்டுக்கொள், சுகுளு! பணமும் செளகரியங்களும், பேரும் புகழும் உள்ள ஒரு குருடனுக்கு வாழ்க்கைப் பட்டுவிட்ட கட்டாயத்திற்காக, சுகுணு மாடாய் உழைக்கிருள். ஏதோ, வாழ்க்கைப்பட்டுவிட்டாளே ஒழிய, மகிழ்ச்சியோடு அவள் வாழவில்லை-என்று. உன்னைப்பற்றித் தவருக நினைத்து யாரும் அவசிய மற்றுக் கழிவிரக்கம் கொள்ளவோ வம்பு பேசவோ சிறிதும் இடம் தராமல் நீ உன்னை நன்முக ஒப்பனை செய்து கொள்ள வேண்டும்! மகிழ்ச்சியோடு துலங்க வேண்டும். இன்னும் சொல்லப்போனல், இவ்வளவு மகிழ்ச்சி உலகிலேயே வேறு எந்தப் பெண்ணுக்கும் இல்லை என்றுபோல் காண்பவர்களுக்கெல்லாம் தோன் றும்படி அத்தனை மகிழ்ச்சியோடும் பெருமிதத்தோடும் உன்னை நீ இந்த உலகுக்குக் காண்பித்துக் கொள்ள வேண்டும். உயர்ந்த வகை மல்லிகை மலர்கள் எந்நேர மும் உன் கூந்தலில் மணந்து கொண்டிருக்கவேண்டும்... பூப்போன்ற உன் முன் கைகளில் கலின் கலின் என்று வளைகள் குலுங்கிக்கொண்டிருக்க வேண்டும். நீ நடந்து வரும்போதெல்லாம் உன்னுடைய கால்விரல்களில் மெட்டி தாளமிடவேண்டும். அப்படித் தாளமிடுவது போல் ஒசை எழுப்பி நடந்து உனக்குப் பழக்கமில்லை என்பது தெரியும். என்ருலும் நான் செவியாரக் கேட்டு மகிழ்வதற்காக-அந்த மகிழ்ச்சியிலிருந்து என்னுடைய மனக்கண்ணில் பல்லாயிரம் கற்பனைகள் தெரிவதற்காக நீ உன் கால்களில் மெட்டியிட்டு நடந்துவரவேண்டும்... 4–7 . . . . . "