பக்கம்:புத்த ஞாயிறு.pdf/108

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


106 புத்த ஞாயிறு

சுகுணு: தெய்வமே ஏன் இத்தனை ஆசைகள்...? எனக்குப்

பயமாகக் கூட இருக்கிறதே...

குமாரகவி: இல்லை சுகுளு! நீ மிகமிக அழகாக இருப்ப தாக, முதன் முதலாக நீ வீட்டுக்கு வந்த மறுதினமே, வேலைக்காரப் பெண்தான் என்னிடம் ஓடிவந்து சொன் ள்ை. தெரியுமோ? வாய் ஓயாமல் என்னிடம் வந்து சொல்லி எத்தனை பெருமைப்பட்டாள் தெரியுமோ? அவள் அப்படிச் சொல்லிய போது உன்னுடைய அழ கைப் பார்ப்பதற்காகவாவது ஒரு விநாடி என் கண் களுக்குப் பார்க்கும் ஆற்றலை அடைந்து பின் இழக்க வேண்டும் போல் ஏங்கித் தவித்தேன் நான். இந்த உலகத்தில் வேறு எதைப் பார்ப்பதற்காகவும் என்னு டைய சொந்தக் கண்கள் எனக்கு வேண்டும் என்று நான் இனிமேல் தவிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனல் உன்னைப் பார்ப்பதற்கு மட்டும் என் சொந்தக் கண்கள் ஒரு விநாடி நேரம் எனக்கு வேண்டும் போல் இருக்கிறது. உன்னைத் தவிர மற்ற எல்லாவற்றையும் காண்பதற்கு உன் கண்களே போதும் எனக்கு...

சுகுணு: அளவுக்கு மீறிய புகழ்ச்சி கூட ஒரு வகைப் போதைதான் என்று சொல்வீர்களே தெய்வமே! அந்தப் போதையை எனக்கே ஏற்றலாமா? நீங்கள் என்மேல் ஏற்றுவது அதிகப் பொறுப்பா, போதையா?

குமாரகவி எப்படியானல்தான் என்ன சுகுளு? இன்னும்

சொல்ல வேண்டும் என்று நினைக்கிற எண்ணங்கள் நிரை நிரையாக வந்து கொண்டேயிருக்கின்றன. அந்த மெட்டியைப் பற்றிச் சொன்னேனே...

சுகுளு: ஆமாம்...கால் விரல்களில் மெட்டி தாளமிட வேண்டும்...தாங்கள் அதன் ஒசையைக் கேட்டு மகிழ்ந்து கற்பனை வானில் சிறகடிக்கவேண்டும்