பக்கம்:புத்த ஞாயிறு.pdf/109

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நா. பார்த்தசாரதி - 107

குமாரகவி: அதுதான்! நாட்டுப்புறத்துப் பெண்கள், இந்த மெட்டி வளையங்களை மிஞ்சி என்று பெயர் சொல்லு வார்கள். உனக்குத் தெரியுமோ? அந்தக் கொச்சைப் பெயரில்கூட, நாம் நினைத்து நினைத்து நுகரும்படியான தொரு கவிநயம் இருக்கிறது. "பாதாதி கேச பரியந்தம்’ என்பார்கள். அந்த அடிமுதல் முடிவரை அல்லது முடி முதல் அடிவரை என்று ஒரு பெண்ணின் அழகுக்கு முழுஎல்லேயைச் சொல்லும் வருணனையில் அழகு இறுதி .யாகப் போய் முற்றித் தரையில் கால் ஊன்றிக்கொண்டு நிற்கிற இடமான விரல்களில், தனியாய் மிஞ்சி-மீதப் பட்டு நிற்கிற இந்த அணிகலனுக்கும் அதையே பெயராய் வைத்துக்கொண்டார்கள்.

சுகுணு கேட்கவே அருமையாக இருக்கிறது, இந்த விளக் கம். தெய்வமே...! திராட்சைத் தோட்டம் நூல் வெளி யிட வேண்டும் என்று சொன்னிர்களே... -

குமாரகவி: ஆமாம்! அதுதான் தொடர்கதை முடியப் போகிறதே...ஆம், நல்லதை நல்ல வேளையில் நினைவு படுத்திய்ை. இதை இப்போதே எழுதிக்கொள்... முன்னுரை எழுதும் போது அதில் சேர்க்க வேண்டும்... அந்தகளுகிய நான் இந்த உலகத்தைப் பார்ப்பதற்கும் பார்த்துப் புரிந்து கொள்வதற்கும் நம்பிக்கை வாய்ந்த கண்களாக விளங்கி வரும் என் அருமை வாழ்க்கைத் துணைவி சுகுளுவுக்கு இந்தப் புத்தகத்தைக் காணிக்கை

யாக்குகிறேன்...என்ன, எழுதியைா? தயக்கம்ோ கூச்

சமோ படாமல் எழுது... - - சுகுளு: தயக்கம், கூச்சம் மட்டும் இல்லை தெய்வமே... இவையெல்லாம் எதற்கு தங்களுக்குப் பணிவிடை புரிந்து தங்கள் வாழ்க்கைத் துணைவியாக உடன் வரு வதற்கு நான் அல்லவா பெருமைப்படவேண்டும்?... நானே பிடிவாதமாகவும், தீர்மானமாகவும் தங்களுக் குக் காணிக்கையாகியிருக்கும்போது, நூலை எனக்குக்