பக்கம்:புத்த ஞாயிறு.pdf/111

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நா. பார்த்தசாரதி 109

சுகுளு: இல்லை தெய்வமே! நாம் சென்று வருகிருேம், இப்போது தொடர்கதையும் முடிந்து ஓய்வாக இருக் கிறீர்கள். இப்போது போய்வந்தால் அடுத்த படைப் புக்களுக்கு உதவியாகவும் இருக்குமே...

குமாரக வி: அப்படியா சொல்கிருய்? உனக்கு விருப்ப மால்ை ஆகட்டும்...இசைவைத் தெரிவித்து விடு. ஐரோப்பிய நாடுகளையும் சுற்றிப் பார்க்கத்தான் உன்

னுடைய கண்கள் இருக்கின்றனவே. எனக்கு வேறென்ன வேண்டும்?

காட்சி-7

(இடம்: இலண்டனில் ஒரு சிறப்புக் கூட்டம்...குமார கவிக் குப் பாராட்டுக் கூறிப் பேச அழைக்கிருர்கள்) -

வரவேற்பாளர்: எழுத்துக்களால் புதிய உலகம் ஒன்றைப் படைத்துக் காட்ட முடியும் என்று ஆசைப்படுவதுடன் நில்லாமல் செய்துகாட்டியும் வருகிறவர் நம்முடைய பேரன்பிற்குரிய தமிழ்நாட்டு எழுத்தாளர் திரு குமார கவி அவர்கள். அவர்களுடைய வருகையால் நாம் பெருமையும் பூரிப்பும் அடைகிருேம்...நம்மிடையே உரையாற்றி மகிழ்விக்குமாறு திரு. குமாரகவி அவர் களே இந்த லண்டன். தமிழ் மன்றத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். (குமாரகவி பேச எழுகிருர்...கையொலி அந்த அரங்கை நிறைக்கிறது) - -

குமாரகவி நண்பர்களே! அழைப்புக்கும் வரவேற்புக்கும் நன்றி வரவேற்புரையில் நான் படைக்க விரும்புகிற புதிய உலகத்தைப் பற்றிச் சொன்னர்கள். கண்களில் லாத நான் பழைய உலகத்தையே சரியாகப் பார்த்து முடிக்கவில்லை. பழைய உலகம், புதிய உலகம் எல்லா - வற்றையும், இதோ என்னருகில் அமர்ந்திருக்கிருளே,