பக்கம்:புத்த ஞாயிறு.pdf/112

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


110 புத்த ஞாயிறு.

இவளுடைய நம்பிக்கைக்கு உரிய கண்களை இரவல்: வாங்கிக்கொண்டுதான் நான் பார்க்கிறேன். எழுத்தில் என்னுடைய கருத்துக்களும், கற்பனைகளும் இவளு டைய பார்வையால தான் படைக்கப்படுகின்றன. (கூட்டத்தில் மீண்டும் கையொலி) - குமாரகவி: (கையமர்த்திவிட்டுத் தொடர்கிருர்) நன்றி.

வாழ்க்கைக்குச் செலவாகிற பொருளை ஈட்டுகிறவன் கணவன். வாழ்க்கையைத் தொடங்கி அதன் மேடு பள்ளங்கள் நிறைந்த நீண்டவழியில் ஆண்மைவாய்ந்த துணையாக இருந்து பெண்ணே உடனழைத்துச் செல்கிற வனும் கணவன்தான். அப்படியிருந்தும் நம்முடைய பழைமை வாய்ந்த மொழியில் மனைவிக்குத்தான் வாழ்க்கைத்துணை என்று பெயர் வைத்திருக்கிரு.ர்கள்கணவனுக்குப் பின்னல், இரண்டடி தயங்கி நின்று நாணி ஒசிந்து வருகிற பலவீனமான இந்தியப் பெண் ஒவ்வொருத்தியும், கணவன் முன் நின்று வழிகாட்அவனுடைய துணையோடு நடத்து சென்ருலும் தானே துணையாயிருந்து அவனை அழைத்துப்போவதுபோல் வாழ்க்கைத் துணை என்ற கம்பீரமான பெயரைத் தனக்குரியதாகச் செய்து கொண்டிருக்கிருள். என்னைப் பொறுத்தவரையிலோ நிஜமாகவே இவள்தான். என் வாழ்க்கைக்குத் துணையாய் இருக்கிருள். வழித்துணையா யும் இருக்கிருள்! ஒரு மனைவி கணவனிடமிருந்து அடையவேண்டிய மகிழ்ச்சியை எல்லாம் என்னிட மிருந்து எதிர்பார்ப்பதற்குப் பதில், கண்களால் உலகத் தைப் பார்க்க முடியாத நான் என்னிடம் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கும் அசெளகரியங்களையும். துன்பங்களையும் சிறிது சிறிதாக என்னிடமிருந்து கேட்டு வாங்கித் தான் அனுபவித்து என் சுமையைக் குறைக்கத் தொடங்கியிருக்கிருள் இவள். கணவன் எந்த தருமத்தைச் செய்கிருனே, அதற்குப் பக்கத் துணையாக நின்று உதவி புரிகிறவள் என்கிற காரணத்