பக்கம்:புத்த ஞாயிறு.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 புத்த ஞாயிறு

கிறேன் என்ருய். இப்போது சொல் சுகுணு...சொல்லி விட்டுக் கடிதங்களைப் பிரித்துப் பார்க்கலாம். s

சுகுளு: இன்று எனக்குப் பிறந்த நாள்...அதுதான்

தெய்வமே...

குமாரசுவி; இதை ஏன் முன்பே சொல்லவில்லே சுகுணு? உன்னுடைய பிறந்த நாளை நான் அல்லவா கொண் டாட வேண்டும்? எனக்கு வழிகாட்டித் துணையா யிருந்து அழைத்துச் செல்வதற்கு என்று பிறந்தவளா யிற்றே நீ.

சுகுளு: "துன்ப நினைவுகளும் சோர்வும் பயமும் எல்லாம் அன்பில் அழியுமடி கிளியே! என்று பாரதி பாடியிருக் கிற மாதிரி, தாங்கள் பேரன்புப் பெருங்கடலாகப் பெருகி என்னைச் சூழ்ந்திருக்கிறீர்கள் தெய்வமே! இந்தப் பெருமிதத்தில் என்னுடைய பிறந்த நாள் என்பது ஒன்றும் எனக்கு அவ்வளவு பெரிதாகப்பட வில்லை ஐயனே... .

குமாரகவி தவறு பெண்ணே முதலில் இதை எழுதி நீ எடுத்துக்கொள் சுகுணு. இது உன்னுடைய பிறந்த நாளுக்காக இன்று நான் தருகிற பரிசு...

(பாடலாகவே அவர் ஒரு கவிதையைச் சொல்ல, சுகுளு அதை எழுதிக்கொள்கிருள்)

குமாரகவி: காணக் கண் கோடி வேண்டும்-அங்தக்

கண்கள் அத்தனையும்-நீ . நாணிச் சிரிக்கின்ற நகைமுகத்தை-அதில் இரகசியமாய் வரும்-உன் வீணைக் குரல்தரு சொல்லிசையே விழும் மலர்போல்-இதழ். பேணித் திறந்து பூப்பூவாய்- நீ பேசும் அதிசயத்தை-நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புத்த_ஞாயிறு.pdf/114&oldid=597479" இலிருந்து மீள்விக்கப்பட்டது