பக்கம்:புத்த ஞாயிறு.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தா. பார்த்தசாரதி - - 113

காணக் கண்கோடி வேண்டும் கண்டு முடிந்ததுமே-யின் ஈனச் சிற்றுலகில் வேறேதும் இருந்து காணுமல்-கண்ணில் ஆன தரிசனத்தின் அழகு குறையாதே அத்தனை விழியும் அறவேண்டும்!

என்ன , எழுதிக் கொண்டாயா? பிறந்த நாள் வாழ்த் தாகவும் பரிசாகவும் இந்தக் கவிதையை ஏற்றுக் கொள்ள வேண்டும், தேவி...! (சிரிக்கிருர்) ...”. சுகுணு: (நாணத்துடன்) தெய்வமே! உங்களுடைய சொற் களால் நான் மிக அதிகமாக அலங்கரிக்கப்பட்டு விட்டேன். மகாகவிகளின் சொற்களால் யார் புகழப் படுகிருர்களோ அவர்களுடைய வசீகரம் அந்த வாக்கி ேைலயே பெருகி வளர்கிறது என்பார்கள். என்னு டைய வசீகரமும் உங்களுடைய ஆசீர்வாதங்களை ஏற்று வளரட்டும் தெய்வமே!

குமாரகவி வெறும் ஆசீர்வாதம் போதுமா பெண்ணே! உன்னே ஒவ்வொரு அசைவிலும் கவனித்துப் போற்ற வேண்டும் போல் ஆசையிருக்கிறது. ஆனால் அசைவு களை உணர முடிகிறதே ஒழியப் பார்க்க முடிய வில்லையே! நேரம் தவருமல் உன்னைச் சாப்பிடச் சொல் கிறேன். அதைக் கூட நான் எங்கே கவனிக்க முடி கிறது. கடிகாரத்தைத் திரும்பிப் பார்த்து வேளா வேளைக்கு உன்னைச் சாப்பிடப் போ என்று உபசரிக்க மனம் விரும்புகிறது. ஆல்ை நான் கடிகாரத்தைப் பார்க்க முடியுமோ? போன வெள்ளிக்கிழமை, பேச்சுப் போக்கில், நேரம் போனதே தெரியாமல் நான் உன்னிடம் வேலை வாங்கிக் கொண்டிருந்தேன். நினைவூட்ட மறந்து போனேன். நீயும் மறந்ததுபோல் எண்ணெய் நீராட்டத்தைத் தவற விட்டு விட்டாய். இப்படி இரண்டு முறை எண்ணெய் நீராட்டத்தைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புத்த_ஞாயிறு.pdf/115&oldid=597480" இலிருந்து மீள்விக்கப்பட்டது