பக்கம்:புத்த ஞாயிறு.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

飘球6 புத்த ஞாயிறு

காட்சி-9

1இடம்: மணிமால் அலுவலகம். வழக்கம்போல் அன்று வந்த கடிதங்களைப் பிரித்துப் படித்துக் காட்டி வகைப்படுத்திக் கொண் டிருக்கிருள் சுகுணு...எதிரே குமாரகவி கடிதங்களுக்கு உரிய பதில் குறிப்பைச் சொல்லிக் கொண்டு அமர்ந்திருக்கிருர்.)

அகுளு: இன்று ஒர் அதிசயம். என் பெயருக்குக் கூட ஒரு கடிதம் வந்திருக்கிறது. மழை கொட்டத்தான் போகிறது...அதுவும் இரகசியம்' என்று குறிப்பு வேறு

குமாரகவி அப்படியா? ஏதாவது மிக முக்கியமானதாக இருக்கும்.அது உன் சொந்த விஷயம்...மணிமாலைக் கடிதங்கள் இன்னும் ஏதாவது மீதமிருக்கிறதா பார்...

.சுகுணு: வேறு கடிதங்களில்லை தெய்வமே! நீங்கள் ஒய்வெடுத்துக் கொள்ளுங்கள். நான் அச்சுப் படிகளை ஒரு பார்வை .ார்த்து விடுகிறேன்... -

(தனக்கு வந்த கடிதத்தைப் பிரித்துப் பார்க்கிருள். சுகுணு வின் உடம்பு பதறுகிறது. உச்சந்தலையில் யாரோ ஓங்கி அடிப்பதுபோல உணர்ந்து நடுங்குகிருள். ஒய்வாக சாய்ந் திருக்கும் குமாரகவியை ஒரு விதமான அச்சத்தோடு பார்க்

(தனியிடத்தில் தனக்குத்தானே) அசுகுணு: நல்ல காலம்...உறங்கி விட்டார் போலிருக்கிறது. உனக்கு ஏதோ கடிதம் வந்தது என்று சொன்னயே என்ன அது என்று கேட்டு விடுவாரோ? உடனேயே அவர் கேட்கவில்லையே? பாழாய்ப்போன இந்தக் கடிதத்தைப் படித்தது முதல் எனக்கு எதுவுமே ஒட வில்லையே...தெய்வமே! இது என்ன அபாண்டமான பழியெல்லாம் என்னைத் தேடி வந்து சேர்கிறதே...

(பரபரக்கிறள்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புத்த_ஞாயிறு.pdf/118&oldid=597483" இலிருந்து மீள்விக்கப்பட்டது