பக்கம்:புத்த ஞாயிறு.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


预0

புத்த ஞாயிறு

முதல் பிட்சு : அடிகளே! இந்த ஆண்டு வைசாக பூர்ண

மைக்கு நான் மணிபல்லவத் தீவில் இருக்க முடியாது. இங்கேயே பூம்புகார் இந்திர விகாரத்தில் நிறையப் பணிகள் இருக்கின்றன. நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

இளம் பிட்சு : நான் மணிபல்லவ யாத்திரை செய்வ

தாகவே இருக்கிறேன். கோமுகிப் பொய்கையைத் தரிசனம் செய்ய வேண்டும். நம் சமயத்தின் புண்ணியத்

தலமான மணிபல்லவத் தீவில் உள்ள அந்தப் பொய்கை

யைப் பற்றிப் பலர் பலமுறை கூறக் கேட்டிருக்கிறேன்.

பிறவிப் பிணி நீக்கும் மருந்து அறவாழி அந்தணனின்

அருளுக்குப் பாத்திரமான அந்தத் தீவில் இருப்பதாக

எல்லாப் பெரியவர்களும் சொல்லுகிருர்களே? ஆளுல்

கோமுகிப் பொய்கைக்குப் போக ஒரு பக்குவம் அடைய

வேண்டும், உயிர்களின் துக்கங்கள் அழியுமிடமே

கோமுகி என்பது நம் தத்துவம்.

பிட்சு : ஆம்! ஆம்! அதில் சந்தேகமென்ன அடிகளே! உயிர்களின் துக்கங்களைப் போக்குவதுதான் கோமுகிப் பொய்கை. அத்தகைய சிறந்த பொய்கையை உடைய தலமும் சிறப்புடையதுதானே? துக்கம்,துக்கநிவாரணம், துக்க உற்பத்தி என்ற மூன்று வகையாலும் உலகத்தை ஆராய்வது நம் சமயமாயிற்றே! நம் சமய வாழ்வின் நோக்கமே-மணிபல்லவத் தீவிற்கு ஒருமுறை போகா மல் நிறைவெய்துவதில்லையே? ஆனல் மணிபல்லவ யாத்திரைக்கு முன் ஒரு பிட்சுவுக்குப் போதுமான அநுபவப் பாடங்கள் அவசியம் வேண்டும்.

பிட்சு : அடிகளே! விலகி நில்லுங்கள். அதோ ஒரு கயமைக் குணம் நிறைந்த களிமகன் குடித்துவிட்டுப்

பெண்ணுெருத்தியோடு தள்ளாடியபடியே வருகிருன்.

வரவரப் பெருமை மிகுந்த இந்தச் சோழர் கோ நகரில் இப்படிக் களிமக்கள் அதிகமாகி விட்டார்கள். இவர்