பக்கம்:புத்த ஞாயிறு.pdf/120

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


118 புத்த ஞாயிறு

கவனித்துக்கொள்ள வேண்டும். ஒய்வெடுத்துக்கொள். [இருவரும் படுக்கைக்குச் செல்கின்றனர். இருவருக் குமே உறக்கம் பிடிக்கவில்லை. ஒருவரோடொருவர் பேசிக் கொள்ளவும் இல்லை. சற்றைக்கெல்லாம் திடீ ரென்று தாங்க முடியாத துயரத்தால் மனம் வெடித்து அழுவதற்கு ஆயத்தம் போல், விசும்பி விசும்பி அழத் தொடங்குகிருள் சுகுணு).

குமாரகவி: ஏன் அழுகிருய் அம்மா? ஒரு குருட னுக்கு வாழ்க்கைப்பட்டு நம் அழகும் இளமையும் இப்படி iளுகிவிட்டதே என்று சில நாட்களாக உனக்குள் ஒரு கலக்கம் வந்திருப்பதுபோல் நான் உணர்கிறேன்...

சுகுணு: அப்படியெல்லாம் எதுவுமில்லை தெய்வமே!

குமாரகவி: இல்லையம்மா! என்னுல் உனக்கு வாழ்வில் ஒரு மகிழ்ச்சியும் இல்லை. இந்தக் குருடனே உன் கணவன் என்று காண்பித்து உலகில் நீ இன்னுெரு பெண்ணுக்கு முன்னல் பெருமைப்படக்கூட முடியாது. அதல்ைதான் நீ பூ வைத்துக் கொள்வதைக் கூட நிறுத்திவிட்டாய். கைகளில் பண்ணிசைத்த வளைகளையும் கழற்றி விட்டாய். நேற்றிரவு நீ அயர்ந்து துரங்கிக்கொண்டி ருக்கும்போது, நான் தொட்டுப் பார்த்து இவற்றை எல்லாம் உணர்ந்தேன்...நான் பிரியத்தோடு உனக்குச் செய்து அணிவித்திருந்த வைரத் தோடுகளையும், மூக்குத்திகளையும் கூட அல்லவா நீ கழற்றிவிட்டாய்! அசெளகரியங்களும் துன்பங்களும் நிறைந்த ஒரு புகழ், பெற்ற பணக்காரக் குருடனோடு வாழ்வதில் உனக்கு என்ன சுகம் இருக்க முடியும் பணமும் புகழும் பார்வை ஆகமாட்டாதே; ஆல்ை இனிமையற்ற இந்த வாழ்க்கையையும் இனிமையானதாக ஆக்கிக்கொண்டு உன்னுடைய பார்வையால் என் அபிப்பிராயங்கள் உருவாகும்படி நீ இவ்வளவு காலம் என்ளுேடு வாழ்ந்த வாழ்க்கையை உணர்த்து நீ ஒரு தேவதையாக என்