பக்கம்:புத்த ஞாயிறு.pdf/122

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


120 புத்த ஞாயிறு:

(எழுந்துபோய் மேசை இழுப்பறையில் வைத்திருந்த, மிரட்டல் கடிதங்களே எடுத்து வருகிருள். விளக்கைப் போட்டு ஒரே மூச்சாக அவற்றை எல்லாம் அவரிடம் படித்து முடிக்கிருள். பின்பு அவரிடம் மன்ருடுகிருள்.)

சுகுளு: தெய்வமே! அபவாதம் என்னைப் பற்றியது என்கிற, கச்சமோ தயக்கமோ எனக்கு இல்லே. கடமையைச் செய்கிற மனநிலையில் எல்லாவற்றையும் அப்படியே, படித்துவிட்டேன். (விம்மி விம்மி அழுகிருள்.): தெய்வமே! பார்வை மட்டும் என்னுடையது. அபிப் பிராயம் உங்களுடையது. உங்களுக்காகவும் சேர்த்து. உலகைப் பார்க்க என் கண்களை நீங்கள் நியமித்திருக். கிறிர்கள். என் கண்கள் உங்களுக்குத் தெரியாமல் இனி எதையுமே மறைக்காது. இதை இத்தனே நாட்கள் மறைத்து வைத்ததற்காக நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும்... குமாரகவி: சுகுளு! இதை நினைத்துப் பயந்து நீ இவ்வளவு நாள் இப்படி ஒடுங்கிப்போயிருக்க வேண்டியதில்லை, உன்னுடைய மனத்தின் வலிமை, இதை நீ வாய்க்கூசா மல் எனக்குப் படித்துக் காண்பித்ததிலிருந்தே தெரிய வில்லையா? உன்னுடைய அழகை எப்போதேனும் காண் பதற்காகவாவது ஒரு விநாடிப் போதாகிலும் எனக்குக்கண்பார்வை வரவேண்டும் என்று முன்பு பலமுறை. நான் நினைத்தேன். இப்போது எனக்கு அந்த ஆசை போயே போய்விட்டது. ஒரு வேளை நீ அழகாய் இருப் பதைப் பார்த்தால் என் கண்களிலும் சந்தேகம் தோன்றலாம். உன் மனம் அழகாயிருப்பதை நான் நிரந்தரமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அந்தப் பார்வை ஒன்று மட்டுமே போதும் என்று இப்போது: நான் மனம் நிறைவடைகிறேன் அம்மா! க்குளு (அழுகிருள்) உங்கள் மனம் மிகவும் உயர்வான து:

தெய்வமே... ..