பக்கம்:புத்த ஞாயிறு.pdf/123

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நா. பார்த்தசாரதி - 121

குமாரகவி : அசட்டுப் பெண்ணே! இதற்காக இப்படி அழலாமா? மாமிசக் கண்களால் மட்டுமே பார்க்கத் தெரிந்த யாரோ ஒரு சாதாரண மனிதன் ஏதோ கிறுக் கியிருக்கிருன். இந்தப் பார்வைக்கு என்னிடமிருந்து அபிப்பிர்ாயமே கிடையாது. உன் அழகை நான் மனக் கண்ணுல் பார்க்கிறேன் அம்மா! அதனுல் அதைப் பற்றிய அபிப்பிராயம் என்றும் மிகமிக உயர்ந்த தாகவே இருக்கும். உன்னை நான் பார்ப்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் இந்த அயோக்கியனின் ஊனக் கண்கள் எனக்குத் தேவையில்லை. உன்னை மட்டும் பார்ப்பதற்கென்று வேறு விஷயங்களைப் பார்த்துக் கறைப்படுத்திக் கொள்ளாத தனிக் கண் ஒன்றை நான் பெற்றிருக்கிறேன் அம்மா! இந்த விநாடியிலிருந்து மறுபடி பூவும் வளையுமாக, என் கிருகலெட்சுமியாக நீ வந்து நிற்கவேண்டும்! நீ பார்வை! நான் அபிப்பிரா யம்! நமக்குள் இரண்டும் எப்போதும் வேறுபடுவதில்லை. எனக்காக உலகைக் கான நான் நம்பிக்கையோடு உன் கண்களை நியமித்திருக்கிறேன். அதே சமயத்தில் உன்னைக் காண மட்டும் என்னிடம் தனியாகவே ஒரு கண் இருக்கிறதே! - - (வாஞ்சையோடு, ஆதரவாக அவளை நெருங்கி அனைத் துக் கொள்கிருர்)

சுகுணு : விடிந்து விட்டது... தெய்வமே! குமாரகவி : ஆம்! உனக்கும் எனக்கும் என்று சொல். பதினேந்து நாட்களுக்குப் பிறகு மறுபடி விடிந்திருக் கிறது அம்மா இந்த விரசமான கடிதங்களால் என்னு டைய அபிமானம் உன்மேல் குன்றிவிடுமோ என்று நீ பயந்ததும், அந்தப் பயத்தால் இந்தக் கடிதங்களை என்னிடம் மறைத்ததும் குற்றங்களில்லை. ஆனால் உன்னை நீயே வாட்டிக் கொண்டு பூவில்லாமல், நகையில்வா மல் வாடி ஒடுங்கியதுதான் குற்றம். மன்னிக்க முடியாத