பக்கம்:புத்த ஞாயிறு.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தா. பார்த்தசாரதி 13

மு. பிட்சு : பார்க்கலாம்!-இவர்களைப் போன்றவர்கள் திருந்துவதற்குப் புத்த ஞாயிறு வழி செய்கிறதா இல்லையா என்றுதானே தெரியப்போகிறது? முதலில் துக்கம் கண்ணுக்குத் தெரிகிறது. பிறகு துக்கங்கள் வாழ்வில் உற்பத்தியாகும் முறை தெரிகிறது. அதற்கும் பிறகுதான் துக்கநிவாரணம் தெரிகிறது. நீரோ இளம் வயதுத் துறவி. அடிக்கடி பொறுமை இழந்து உணர்ச்சி வயப்பட்டு விடுகிறீர். அனுபவங்கள் முதிர முதிரத்தான் மனத்தில் புத்த ஞாயிறு உதிக்கும். நீர் பிட்சுவாகி இந்தப்புத்த விகாரத்திற்கு வந்து சில நாட்களே ஆகின் றன. பிரத்யட்சவாதியாகிய இந்தக் களிமகன் எதிர்ப் பட்டதற்கே இவ்வளவு வருந்துகிறீர்கள். இன்னும் எவ் வளவோ மனிதர்களைச் சந்திக்கவேண்டியிருக்கும். எவ் வளவோ விவாதங்களை நடத்தவேண்டியிருக்கும். அவ் வாறெல்லாம் பலரையும் பலவற்றையும் சந்தித்த பின்பு கோமுகிப் பொய்கையைக் காண்பதுதான் நன்மை தருவதாக இருக்கும். எவ்வளவிற்கு உலகைத் துறக்க முயல்கிருேமோ அவ்வளவிற்கு உலகை நாம் நெருங்கி ல்ைதான் பின்பு துறக்க முடியும். இந்தக் காவிரிப்பூம் பட்டின நகரம் இருக்கிறதே, இது ஒரு வெறும் நகரம் மட்டுமல்ல. இல்லறத்தார்களுக்கும், துறவறத்தார் களுக்கும், இராஜ தந்திரிகளுக்கும், வீரர்களுக்கும் பலப்பல அனுபவப் பாடங்களைக் கற்றுக்கொடுக்கிற பெரியதொரு பல்கலைக் கழகம் இது என்பதை நீங்கள் புரிந்துகொண்டாலே போதும். - - இ. பிட்சு: நீங்கள் சொல்வதை அப்படியே ஒப்புக் கொள் கிறேன். இனி உங்களைச் சந்திக்கும்போதெல்லாம் என் அனுபவங்களை அவ்வப்போது உங்களிடம் கூறு வேன். இப்போது நான் நாளங்காடிச் சதுக்கத்திற்குப் ‘போய்க்கொண்டிருக்கிறேன். விடை கொடுங்கள், போய்வருகிறேன். மீண்டும் நாளைக்குச் சந்திக்கிறேன். மு. பிட்சு: நலமே விளைக! சென்று வாருங்கள்.