பக்கம்:புத்த ஞாயிறு.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


14 - புத்த ஞாயிறு.

இ. பிட்சு: ஆம்! (தனக்குத் தானே கூறிக்கொள்வது போன்ற மெல்லிய குரலில்) அவர் கூறுவதும் மெய் தான். இந்தக் காவிரிப் பூம்பட்டின நகரமே ஒரு பெரிய பல்கலைக் கழகத்தைப் போன்றது. கோமுகிப் பொய்கைக்கு யாத்திரை சென்று மெய்யுணர்வு பெறு வதைவிட முதலில் இந்த நகரத்தைக் கற்று மெய்

யுணர்வு பெறவேண்டும் நான்.

(திரை)

காட்சி-2

இடம்:-நாளங்காடி

(காவிரிப் பூம்பட்டினத்தின் மாபெரும் கடைவீதியும் நகரின் நடுமையமான பகுதியுமாகிய நாளங்காடி. பல விதமான வாணிகக் குரல்கள். இடையிடையே சிலம்பு குலுங்க நடனமாதர்கள் செல்கின்றனர். நடந்து செல் லும்-குதிரைகள், யானைகள் போக்கு வரவு-பிளிறல் கனத்தல் ஒலிகள், யாழ், குழல், முரசு வாத்தியங்களின் இடையிட்ட ஒலிகள்-சமயவாதிகள் என் சமயமே. பெரியது' என்று தத்தம் சமயம் பற்றி வாதிடும் விவாத ஒலிகள்) - . பு. பிட்சு: (அந்தச் சூழலில் தன் சமயத்தின் பெருமையைப் பற்றியும் சிறப்பாக அங்கே முழங்கவேண்டும் என்று கருதியவராக) கூடியிருக்கும் பூம்புகார் நகரப் பெரு மக்கள் அனைவரும் என் அருகே வாருங்கள்!சமயங்களில் சிறந்த அமைப்புடையது எங்கள் புத்த சமயமே ஆகும். - உலகில் நிறைந்திருக்கும் சகல துன்பங்களும் போக வேண்டுமானல் புத்தஞாயிறு உடன்தோன்றவேண்டும். ஒர் இளைஞன்: நிறுத்துங்கள் அடிகளே! இந்தக் கூட்டத்தில்

இருக்கும் என் போன்ற இளைஞர்களுக்கு ஒரு சந்தேகம். பு: பிட்சு என்ன சந்தேகம் இளைஞனே! சந்தேகங்களைத் தெளிவு செய்ய நான் எப்போதுமே தயாராக இருக் கிறேன்! உன் சந்தேகத்தைக் கேள். -