பக்கம்:புத்த ஞாயிறு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 17

உங்கள் புத்தருக்கு ஞானம் பிறந்தது. ஆனல் இவர் களைப் போன்றவர்களின் பசியும், பிணியும் தீர வழி தான் இன்னும் பிறக்கவில்லை. இவர்களைப் போன்ற வர்கள் தலைமுறை தலைமுறையாக இன்னும் உலகத்தில் வளர்ந்துகொண்டேதான் இருக்கிருர்கள். நோயும், நொடியும், பசியும், பாவமும் இவர்களோடு வழிமுறை வழிமுறையாக வந்துகொண்டே இருக்கின்றன. ஏன் அப்படி? -

நீங்களோ உங்களுடைய இந்திர விகாரத்தின் வாசலில் வசதியாக நின்று கொண்டு புத்த ஞாயிறு தோன்றும் காலத்தில் உலகமே சுவர்க்க பூமியாக மாறிவிடும் என்று கதை அளந்து பாமரர்களை ஏமாற்றிக் கொண் டிருக்கிறீர்கள். இப்போது சொல்லுங்கள்! இவர் களுடைய இருண்ட வாழ்க்கையில் புத்த ஞாயிறு தோன்றிப் புத்தொளி பரப்புமா? பரப்பாதா? ஏன்? இவர்களுடைய குழிந்த வயிறுகளில் சோறு குவியாதது ஏன்? ஒளியிழந்த கண்களில் ஒளி தோன்ருதது ஏன்? என்று ஆவேசம் கொண்டவன் ஆகிய நான் எண்ணுவ தில் பிழை என்ன இருக்கமுடியும்? என்னுடைய இந்தக் கேள்விகளுக்கு நீங்கள் பதில் என்ன கூறப் போகிறீர் கள்? சொல்லுங்கள்!......

பிட்சு: தம்பி! உன் கேள்விகள் மிக அழகாக இருக்கின்றன. ஆனல் ஆழமாக இல்லை. சார்வாக மதத்தைச் சேர்ந்த வர்களுக்குத்தான் சொற்களை இவ்வளவு அழகாகத் தொடுத்துப் பேசவரும். அவர்கள் தாம் இப்படிப் பொருளற்ற கேள்விகளைக் கூட அழகான சொற்களால் கேட்பார்கள். இறைவன் என ஒருவன் இல்லை என் பார்கள். நல்வினை தீவினைகளின் விளைவை ஒப்புக் கொள்ளமாட்டார்கள். தனித்தனியாகத் தங்கள் இன்பதுன்பங்களுக்குத் தங்கள் வினைகளே காரண மென்று புரிந்து கொள்ளாமல் இறைவனே காரண

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புத்த_ஞாயிறு.pdf/19&oldid=597382" இலிருந்து மீள்விக்கப்பட்டது