பக்கம்:புத்த ஞாயிறு.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


18 புத்த ஞாயிறு.

மென்று தவருகக் கருதி மயங்கி அவனேயும் சமயங்களை யும் பழிப்பார்கள். இ&ளஞன்: அடிகளே! நான் யாரையும், எதற்காகவும் பழிக்கவில்லை. இவர்கள் இப்படி வாழ நேர்ந்ததன் காரணத்தை மட்டுமே உங்களிடமிருந்து தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். பிட்சு : நல்லது! அதைத் தெரிந்து கொள்ளுவதற்கு நீயும், நானும், சிறிது நேரம் விரிவாகப் பேசி வாதாட வேண்டும். இதோ இங்கே என்னையும் உன்னையும் சுற்றிக் கூடியிருக்கும் காவிரிப் பூம்பட்டினத்துப் பொது மக்கள் சாட்சியாக உன்னைக் கேட்கிறேன். சமய வாதம் புரிகிற இருவரும் ஒத்த அறிவுடையவராக இருக்க வேண்டும் என்பது நியாயம். என்ைேடு சமயவாதம் புரிவதற்கு நீ கல்வியினுல் தகுதி உடையவனு என்று முதலில் நான் தெரிந்து கொண்டு விடுவது நல்லது. நீ எந்தெந்த நூல்களைக் கற்றிருக் கிருய் என்று சொல் பார்க்கலாம். இளைஞன் : வில்வித்தை, யானையேற்றம், குதிரையேற்றம், வாட்போர், மற்போர் முதலியவற்றை நன்ரு கக் கற்றிருக்கிறேன். - (பதிலுக்கு பிட்சுவின் ஏளனச்சிரிப்பொலி-தொடர்ந்து - கூடியுள்ள பலரது சிரிப்பொலி) -

பிட்சு: (சிரித்த சுவடு மாருமலே) தம்பி! உன்னுடைய வாட்டசாட்டமான உடம்பையும், முரட்டுத்தோற். றத்தையும் பார்த்தாலே நீ பெரிய வீரன் என்பது தெரிகிறது. ஆனல் நான் இப்போது கேட்கும் கேள்வி உன் உடம்பின் வளர்ச்சியைப் பற்றி அன்று. மனத் தின் வளர்ச்சியைப் பற்றியே கேட்கிறேன். மனம் வளர்வதற்காக நீ என்னென்ன நூல்களைக் கற்றிருக் கிருய்? சமயங்களையும் தத்துவங்களையும் பற்றி நீ என்னென்ன தெரிந்து கொண்டிருக்கிருப்? எ ன் னென்ன புரிந்து கொண்டிருக்கிருய்...?