பக்கம்:புத்த ஞாயிறு.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


22

புத்த ஞாயிறு

கணிகை : பிட்சுவே! பேசுவதை நிறுத்துங்கள். ஆணவ

மாம், ஆணவம்! எந்த ஆணவத்தை என்னிடம் நீங்கள் கண்டுவிட்டீர்கள்? அழகும், குரலினிமையும் எனக்குச் சொந்தமில்லை என்கிறீர்கள் நீங்கள். அவை எனக்கே சொந்தம், நானே என்னிடம் திறமையாக வளர்த்துக் கொண்டவை என்கிறேன் நான்.

பிட்சு : இல்லை! கண்டிப்பாக இல்லை. அழகும், குரலும்,

திறமையும் நம்மிடம் இருப்பதாகப் பேசும் ஆணவங் கள் மட்டுமே நமக்குச் சொந்தமாகிறவை. வாழ்வில் நாமே இதைப் புரிந்து கொள்வதற்கு ஒரு சந்தர்ப்பம் வராமற் போகாது. மறந்துவிடாதே.

கணிகை : தயைகூர்ந்து நான் சொல்லுவதைச் சிறிது

.பிட்

கேளுங்கள் அடிகளே! செந்தழல் நிறமேனியும், கள்ளங் கபடற்ற-புன்முறுவல் திகழும் முகமும், ஞானச்சுடர் ஒளிரும் கண்களுமாக நீங்கள் இருக்கிறீர்களே-உங்க களுடைய இந்த அழகு உங்களுக்குச் சொந்தம் இல்லையா? உங்களுடைய இந்த அழகைப் போன்றது தானே என்னுடைய அழகும்? என் அழகை மட்டும் ஏன் வெறுக்கிறீர்கள்? என்னுடைய இந்த விழிகளின் தாபம் நிறைந்த பார்வை உங்களை ஒன்றும் செய்யவில்லையா? என்னுடைய இந்தக் குரலின் இனிமை உங்கள் இதயத் தில் புகுந்து ஊடுருவவில்லையா? தயவு செய்து மறு மொழி கூறுங்கள் சுவாமி...?

சு : நான் கூறுவதற்கு எதுவும் இல்லை பெண்ணே! ஒரு துறவியின் பார்வையில் அழகுகள் படும்விதமே வேறு. எல்லா அழகுகளுக்கும் மூலமாக இறைவனைத் தேடுகிற வர்கள் நாங்கள். இறைவனே மறந்து அழகுகளைப் பார்க்க எங்களுக்குத் தெரியாது. எல்லா அழகுமே எங்களுக்கு இறைவன்தான்.

கணிகை அதிருக்கட்டும்! அடிகளே! துன்பப்படுகிறவர்

களுக்கு உதவி செய்து அவர்களுடைய துன்பத்தைப் போக்குவதுதானே உங்கள் சமயத்தின் இலட்சியம்...?