பக்கம்:புத்த ஞாயிறு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 23:

பிட்சு ஆம்! அதையேன் நீ இப்படித் தூண்டித் தூண்டி வினவுகிரு ய் என்று தெரியவில்லையே? இதன் உட் பொருள்தான் என்ன? கணிகை : (கலகலவென மயக்கமூட்டுகிற விதத்தில் சிரித்த படி) உங்களுடைய கடைக்கண் என்பக்கமாகத் திரும்ப வேண்டும் சுவாமி! உங்கள் கருணைக்காக நான் துன்பப் பட்டுத் தவித்கிறேன்-என்பதை நீங்கள் g_ঞ্জলা - வில்லையா...இன்னும்: - பிட்சு : உன்மேல் எப்போது கருணை செலுத்த வேண்டும்?

உன்னை எப்போது கடைக்கண் பார்க்கவேண்டும் என்ப தெல்லாம் எனக்குத் தெரியும். கணிகை: எப்போது என்பதை இப்போதேசொல்வீர்களா..? பிட்சு : சொல்லமாட்டேன்! ஆனல் எப்போது மறுபடி உன்னைத் தேடி வரவேண்டுமோ அப்போது தாமாகவே என் கால்கள் உன்னைத் தேடிவரும். கணிகை விரும்புகிற போது செய்யாத உதவியை எப்போதாவது வந்து செய்வதில் என்ன பயன் இருக்க முடியும்: பிட்சு : விரும்புகிறபோது உதவி செய்வதைவிடத் தேவைப் படுகிற போது உதவி செய்வதுதான் நல்லதென்று' நான் கருதுகிறேன் அம்மா! ... ." - . கணிகை; சரி உங்கள் விருப்பம். - பிட்சு : என் விருப்பமல்ல...இறைவனின் விருப்பம்-என்று சொல்லு பெண்னே! நல்லது! விடைபெறுகிறேன். உரியகாலத்தில் மறுபடி உன்னைச் சந்திப்பேன். . (திரை)

காட்சி 5 இடம்-இந்திரவிகாரம் (புத்த பிட்சு மறுபடி தம்முடைய தங்கும் இடமாகிய இந்திர விகாரத்திற்குத் திரும்புகிருர்-மறுபடி முதற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புத்த_ஞாயிறு.pdf/25&oldid=597388" இலிருந்து மீள்விக்கப்பட்டது