பக்கம்:புத்த ஞாயிறு.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நா. பார்த்தசாரதி 25.

எனவே என்னுடைய துன்பமாகிய இந்தத் தாபத்தை யும் தீர்த்தருளுங்கள்’’ என்ருள் யுவதி. மு. பிட்சு : பாவம்! பாவம்! அறியாமை. t.

இ. பிட்சு தன்னுடைய அழகையும், குரல் இனிமையை யும் நான் கவனிக்க வேண்டுமென்று கெஞ்சிளுள் கணிகை யுவதி. கருணை செலுத்துவதைவிட ஒரு துறவிக்கு வேறு என்ன கடமை என்று சிரித்தபடி என்னை ஒரு கேள்வியும் கேட்டாள்.

மு. பிட்சு : இப்படிப்பட்ட கேள்விகள் எல்லாம் புத்த தர்மத்தையே உணராத கேள்விகள். (பாட்டாகவே கீழ் வருவதை (சங்கராபரணத்தில் பாடுகிரு.ர்.) இசைப்பாட்டு (3) -

'ஆதி அமலன்

போதி மாதவன் புண்ணிய சீலன் மாதவச் செல்வன்

மணிமுடி துறந்தேன் நாதன்கல்லவன்

நலிவுகள் தீர்ப்பவன் பாத பங்கயம்

பணியப் பணிய வேதனை தீரும்

விந்தைகள் நிகழும்' என்பதல்லவா புத்த தத்துவம்? இதைப் புரிந்து கொள் ளாமல் இருப்பவர் பற்றி என்ன சொல்வது?

இ. பிட்சு : போதிமாதவனுடைய புதிய தத்துவத்தை உணராதவர்கள் நம் பூம்புகாரில் நிறைய இருக்கிருர் கள். அவர்களையெல்லாம் அறிவுறுத்திச் செம்மை செய்வதற்கென்று நான் இந்த நகரத்தின் வீதிகளில் இன்னும் நிறைய அலைந்து திரிய வேண்டியிருக்கிறது. L}–2