பக்கம்:புத்த ஞாயிறு.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


36

புத்த ஞாயிறு

அலைந்து திரியாமல் இங்கு எதையும் சாதிக்க முடியாது போலிருக்கிறதே?

. பிட்சு : சுடச் சுடத்தான் தங்கம் ஒளி பெருகி மெரு

கேறும். தேய்க்கத் தேய்க்கத்தான் சந்தனம் மணம் பெருகி நிற்கும். வருட வருடத்தான் யாழ் இன்பம் பயக்கும். உலக அநுபவங்களில் தோய்ந்து தோய்ந்து பின்பு அவற்றிலிருந்து விடுபட விடுபடத்தான் பரி நிர்வாணம்-என்ற நம் சமயத்தின் மிக உயர்ந்த முக்தியை நாம் அடைய முடியும்! அந்த மகா நிர்வா ணத்தை அடையும்போது எண்ணற்ற புத்தர்களின் புகழ்மிக்க பரம்பரையில் நாமும் ஒருவராகிவிடுகிருேம். நாம் அலைந்து திரிவது எல்லாம் அத்தகைய உயர்ந்த நிலைக்கு நம்மைக் கொண்டு செல்லப் பயன்படவேண் டும், ஒரு பிட்சுவுக்கு நல்ல சங்கம்-அதாவது ஞான வான்களின் தொடர்பு-வேண்டும், ஞானவான்களின் தொடர்பாகிய சங்கமும் தர்மமும் விளங்கிவிட்டால் புத்தர் பிரானின் சரணங்களை அடைவது மிகமிகச் சுலபம். புத்தம் சரணம் கச்சாமி,தர்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி-என்றல்லவா நாம் சொல்லு கிருேம்? - பிட்சு : ஆம்! ஆம்! அவ்வாறுதான் சொல்லிவரு கிருேம்! இன்றிரவு நான் இந்தப் பூம்புகாரின் புறநகரி லுள்ள சக்கரவாளக் கோட்டத்திற்குச் செல்லலாம் என்றிருக்கிறேன் அடிகளே! பிட்சு சக்கரவாளக் கோட்டத்திற்கா-? இரவு நேரத் தில் அங்கே போவது மிகவும் பயங்கரமான காரிய மாயிற்றே? பேய்களும், பூதங்களும், காபாலிகர்ளும், உலாவும் சுடுகாட்டிற்கு இரவிலா செல்லப் போகின்றீர் கள்?

. பிட்சு என்ன செய்வது? சத்தியவான் ஆகிய ஒரு

பிட்சு பயத்தையும் அறவே போக்கிக் கொண்டாக

வேண்டுமே?