பக்கம்:புத்த ஞாயிறு.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நா. பார்த்தசாரதி 27

மு. பிட்சு: சரி! உங்கள் விருப்பம்! அப்படியே போய்

வாருங்கள். இ. பிட்சு வருகிறேன் அடிகளே! மீண்டும் பார்ப்போம். (திரை)

காட்சி.6

இடம்:-சக்கரவாளக்கோட்டம்

(காவிரிப்பூம்பட்டினத்தின் புறநகராகிய - அடர்ந்த காடு-நரிகளின் ஊளே-ஆந்தையின் அலறல் ஒலி-விட்டு விட்டு நீர்த்தவளைகளின் குரல் - சில்வண்டுகளின் ரீங்காரம்-பயங்கரமான சூழல்-சக்கரவாளக் கோட் டத்தின் காட்டுக்குள்ளே இளம் வயதுப் புத்த பிட் சு இத்தகைய சூழ்நிலையில் நுழைகிருர்) பிட்சு (தனக்குள்) என் நண்பராகிய இந்திர விகாரத்துப் பிட்சு கூறியது சரியாகத்தான் இருக்கிறது! இரவு நேரத்தில் இந்தச் சக்ரவாளக் கோட்டம் இவ்வளவு தனிமையாகவும், இவ்வளவு பயங்கரமாகவும் இருக்கும் என்று முன்பே தெரியாமல் போய்விட்டதே? இங்கே கூகையும் கோட்டானும், ஆந்தையும் நரியும் அலறுகிற ஒலிகளே நடந்து வருகிறவனைப் பயமுறுத்துகின்ற தன்மையுடையவைகளாக ஒலிக்கின்றனவே! பினந் தின்னும் நரிகளையும் கூகைகளையும் கோட்டான்களையும் தவிர இங்கு வேறெவரையும் சந்திக்க முடியாது போலி ருக்கிறதே...ஆ...அதோ கழுத்தில் எலும்புகளும், மண்டையோடுகளும், நிறைந்த கபாலமாலை அணிந்து, சடையும் முடியுமாக ஒரு முரட்டு மனிதன் எதிரிலே வருகிருனே...? (தவளை, ஆந்தை, நரிகளின் ஒலிகள் இடையிடையே ஒலிக்கின்றன)

காபாலிகன்: யாரது...? இந்த நள்ளிரவு வேளையில் இந்தச் சுடுகாட்டுக் கோட்டத்திற்குள் தைரியமாக நுழைய உனக்கு எப்படி மனம் வந்தது? இது மனிதர்கள் அழியும்