பக்கம்:புத்த ஞாயிறு.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


28 புத்த ஞாயிறு.

இடம் என்பதை நீ மறந்துவிட்டாயா? அழிந்தபின் நுழையுமிடத்தில், நுழைந்தபின் அழியவந்த நீ யார்? பிட்சு: நான்தான் புத்தபிட்சு! ஐயா கபாலிகரே தைரியம் என்பது மனத்தைப் பொறுத்த செய்தி. மனிதர்கள் அழிந்த பின்பு வரக்கூடிய இடத்திற்கு அழியும் முன்பே வந்து திரும்பக் கூடாதென்று உனக்கு Այրrriசொன்னது? காபா: நிறுத்து உன் பேச்சை! எலும்பும், தோலுமாக நோஞ்சான் ஆளாக வந்திருக்கிற உனக்கு இப்படித் திமிரான பேச்சுக் கூடாது. நீ ஒரு காபாகலிகனுடைய கையில் சாக விரும்பமாட்டாய் என்று நினைக்கிறேன். மரியாதையாக இங்கிருந்து திரும்பிப் போய்விடு! பிட்சு: நான் எலும்பும், தோலுமாக நோஞ்சானுக இருப்ப தாய்க் கேவி செய்கிறீர்கள் காபாலிகரே! ஆளுல் வலிமையாக இருப்பதற்கு அடையாளம் பூதாகாரண மாகத் தோன்றுவது என்பதல்ல. உடலின் வலிமையை விட மனத்தின் வலிமையைப் பெரிதாக மதிக்கிறேன் நான். அது சரி...? காபாலிகரே! இந்தச் சுடுகாட்டுக் கோட்டத்தில் உங்கள் இனத்தவராகிய காபாலிகர்கள் சேர்ந்து வசிக்கும் வன்னிமன்றம் என்ற பகுதி எங்கே இருக்கிறது என்பதைச் சற்றே காண்பிக்க முடியுமா? காபாலி: (குரலில் பயமும் திகைப்பும் தெரிய) வன்னி மன்றத்திற்கா வழி கேட்கிருப்? உன்னைப் போன்றவர் கள் அங்கே போனல் திரும்ப முடியாது புத்த பிட்சுவே! அங்கிருப்பவர்களும் இப்படி என்னைப்போல் சாதுவான வர்களாகவோ நல்லவர்களாகவோ இருப்பார்கள் என்று எதிர்பார்க்காதே! அவர்கள் அனைவரும் முன் கோபக்காரர்களாக இருப்பார்கள். அவர்களிடம் இருந்து தப்பி நல்லபெயரெடுத்து உயிரோடு வெளியே வருவது என்பது இயலாத காரியம். எனவே நீர் வன்னி மன்றத்திற்குப் போகிற எண்ணத்தைக் உடனே கைவிடுவது நல்லது என்பது என் அபிப்பிராயம்.