பக்கம்:புத்த ஞாயிறு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 29

விட்சு: காபாலிகரே! என் உயிரைப் பற்றிக் கவலை வேண்

டாம். ஒரு துறவிக்கு-எதையும்.எந்த நிலையிலும் பிறருக்கு விட்டுக்கொடுக்க வேண்டுமென்ற நிஐலதான் உண்மை நிலை. வன்னி மன்றத்திலும் இந்தச் சக்கர வாளக் கோட்டத்திலும் உள்ள எல்லா இடங்களிலும், சுற்றிப்பார்க்க வேண்டுமென்றுதானே நான் இங்கு வந்திருக்கிறேன்.

காபாலி: சுற்றிப்பார்ப்பதைப் பற்றி எனக்கு எதுவும் மறுப்பு இல்லே! ஆனல் சுடுகாட்டுக் கோட்டத்தின் எல்லைக்குள் கபாலிக சமயத்தை எதிர்த்து நீ எவரிடமும் வாதிடக்கூடாது. நான் சொல்லுவதையும் மீறி வாதிட்டுவிட்டால் அதன் பயனே அநுபவிக்க நேரிட ga}{T to .

பிட்சு: காரணமின்றி என்னேப் பயமுறுத்துகிறீர்கள்.

காபாலி: நீ கூறுவது தவறு! காரணங்களோடுதான் பயமுறுத்துகிறேன். நேரமோ நள்ளிரவு. இடமோ சுடுகாட்டுக் கோட்டம், எனவேதான் நீ கவனமாக இருக்கவேண்டுமென்கிறேன். விட்சு: கவனமாக இருக்கிற பொறுப்பை எனக்கு விட்டு விட்டு நீங்கள் என்னே வன்னி மன்றத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். -

காபாலி: சரி! வாருங்கள் போகலாம்.

(இருவரும் சிறிது தொலைவு நடக்கின்றனர்) (பறவைகளின் ஒலி-ஆந்தை அலறல்-நரி ஊளை.) காபாலி: இதோ வன்னிமன்றம் வந்துவிட்டது. பிட்சு: சுற்றிப் பார்க்கலாம். நீங்களே வழிகாட்டி அழைத்துச் செல்லுங்கள். (சிரித்தபடி) உங்கள் சமயத் தவர்களை எல்லாம் தனியே சந்தித்து எதிர்கொள்ளவே பயமாக இருக்கிறது. அதஞல் உங்கள் துணை தேவை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புத்த_ஞாயிறு.pdf/31&oldid=597394" இலிருந்து மீள்விக்கப்பட்டது