பக்கம்:புத்த ஞாயிறு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 3?

ஒர் இந்திர விழாவின் தொடக்க நாளன்று அவருக்கும்

முதிய பிட்சுவுக்கும் இந்திர விகாரத்தில் இடையில் கீழ்வரும் விவாதம் தொடங்கி நடைபெறுகிறது !

இளம். பி: அடிகளே! இன்னும் என்மேல் மனம் இரங்கவில் லேயா? முதன் முதலாக நான் தங்களிடம் மணிபல்லவ யாத்திரைக்கு அனுமதி கொடுத்தருளுமாறு வேண்டிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அநுபவப் பாடங்களே முற்ருகக் கற்றுத் தெரிந்து கொள்ளச் சொன்னீர்கள். நானும் இந்த நகரம் முழுவதும் ஒடியாடிக் கற்று வந்தேன். துக்கம், துக்க நிவாரணம், துக்க உற்பத்தி ஆகிய நம் மதக் கொள்கைகளை ஆழ்ந்து பயின்று மகா நிர்வாணகதிக்கு மனத்தை உயர்த்திக் கொள்ள வேண் டும் என்றீர்கள். அவ்வளவும் செய்தேன். ஆண்டுகள் பல ஆகிவிட்டன. இன்னும் எனக்கு நீங்கள் அருள் செய்யவில்லை.

முதிய, பி: அருள் செய்ய வேண்டிய காலம் நெருங்கி விட்டதென்று நினைக்கிறேன். இந்திர விழாமுடிந் ததும் தொடர்ந்து உடனே வருகிற வைகாசி விசாகத் தின் போது நீங்கள் மணிபல்லவ யாத்திரைக்கு, பாத்திரமாகி விடுவீர்கள் என்றெண்ணுகிறேன், தயை கூர்ந்து அதுவரை பொறுமையாக இருங்கள்.

இளம். பி. தங்கள் கட்டளையை இனியும் நான் மீற மாட் டேன் ஐயா! நீங்கள் பொறுத்திருக்கச் சொல்லும் காலம்வரை பொறுத்திருப்பேன். எவ்வளவு கால மானலும் பொறுத்திருப்பேன். தங்கள் கட்டளையை மேற்கொண்டு இந்த நகரின் நாளங்காடியிலுள்ள சமய வாதிகளைத் தேடிச் சென்று வாதம் புரிந்தேன். சக்கர வாளக் கோட்டத்துக் காடுகளில் நள்ளிரவு என்றும் பாராமல் அலைந்தேன். காலம் ஒடுவதையும் கனக் கிடாமல் பொறுமையாகக் காத்திருந்தேன். இன்னும் என்னைப் பொறுமையாக இருக்கச் சொல்கிறீர்களே...?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புத்த_ஞாயிறு.pdf/33&oldid=597396" இலிருந்து மீள்விக்கப்பட்டது