பக்கம்:புத்த ஞாயிறு.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


34

புத்த ஞாயிறு

யைத் தரிசனம் செய்ய வேண்டும் என்பதையும் நினைவு கூராமல் இருப்பதில்லையே? அப்படி இருக்கும்போது பாடிப் பரிசில் பெறுகிற இந்தப் பாணர் கூட்டத்துக்குப் பலர்முன் பாடிப் பொருளடைய வாய்ப்புத்தரும் இந், திரவிழா பெருமிதத்தைத் தருவதில் வியப்பென்ன? (இந்த வேளையில் -குதிரைகள் பூட்டிய ஒரு சிறியதேர் பிட்சுவுக்கு மிக அருகில் வந்து நிற்கிறது-தேர் வந்து நிற்கும் ஒலி-அதிலிருந்து இறங்கி வந்தவர் பெருஞ், செல்வர்போல் தோன்றுகிருர்-அவர் இளம்பிட்சுவின் அருகே வந்து பேசுகிருர்)

செல்வ ! ஐயா! இளம் புத்தபிட்சுவே! இத்தனை இளம்

பருவத்தில் இத்தனை அழகான உடலை ஏன் துறவு என்ற கொடுமைக்கு இலக்காக்கிக் கொண்டிருக்கிறீர்கள்? உம்மைப்போல் அழகுள்ள ஒரு வாலிபரே நான் தேடிக் கொண்டிருக்கிறேன்.

பிட்சு : எதற்காகவோ...?

செல்வர் : என்னுடைய செல்வங்களுக்கு அதிபதியாக்கி

மகிழ்வதற்காக! நான் மிகப்பெரிய செல்வர்களுக்கு இந்நகரத்து அரசர் வழங்குகிற எட்டி, காவிதி, போன்ற பட்டங்களை எல்லாம் பெற்றவன். எனக்கு ஒரே மகள்தான் வாரிசு. ஆண்மக்கள் கிடையாது. என் செல்வங்களை எல்லாம் கட்டி ஆளும் வல்லமை வாய்ந் தவன் யாரோ அவன்தான்-எனது மற்ருெரு செல்வ மாகிய மகளையும் கட்டி ஆளவேண்டுமென்பது என் விருப்பம்.

பிட்சு : புத்தர் பெருமான் உங்கள் விருப்பம் நிறைவேறக்

கருணை புரியட்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

செல்வர் : புத்தர் பெருமான் கருணை புரிவது ஒருபுறம்

இருக்கட்டும். நீங்கள் கருணை புரிய இணங்குவீர்களா என்பதை முதலில் எனக்குத் தெரிவியுங்கள்.