பக்கம்:புத்த ஞாயிறு.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நா. பார்த்தசாரதி 35,

பிட்சு : நான் எந்தவிதமான கருணையை உங்களுக்கும்.

புரிய முடியும் என்று நினைக்கிறீர்கள்? செல்வர் : என்னுடைய மனத்தில் இந்த விநாடியில் இருக் கும் ஆசையின்படி எனக்கு வேண்டிய எல்லாவிதமான கருணைகளையும் நீங்கள்தான் எனக்குத் தரமுடியும் என்று தோன்றுகிறது. - பிட்சு : ஒரு செல்வமும் இல்லாத என்னைப்போன்ற துறவி ஒருவன் எல்லாச் செல்வமுமுள்ள உங்களைப் போன்ற ஒருவருக்கு என்ன உதவி செய்ய முடியுமென்பதுதான் எனக்குப் புரியவில்லை ஐயா? செல்வர் : என்னேடு சற்றே தனியாக வருவீர்களானல்

சொல்வேன், வருகிறீர்களா? -

(பிட்சு தயங்குகிருர்) செல்வர் : பிட்சுவே! தயக்கம் வேண்டாம். வாருங்கள். உங்களுக்கு நான் ஒன்றும் தீங்கு செய்யப் போவா தில்லை. தேரில் ஏறுங்கள் சொல்கிறேன். பிட்சு : சரி.வருகிறேன். ஆனல் எந்த நிபந்தனைக்கும் இனங்காமல் வருகிறேன். போகலாம் வாருங்கள். (இருவரும் தேரில் ஏறியபின்) செல்வர் : தேர்ப்பாகா! தேரை எட்டிகாவலர்கள் வசிக் கும் நமது செல்வச் செழிப்பு மிக்க தெருவிற்குச் செலுத்து. தெருவில் இந்திரவிழாக் கூட்டம் அதிகமாக இருக்கும். கவனமாகச் செல். -

(தேர் விரைகிறது) - செல்வர் : அதோ தெரிகிறதே...ஏழடுக்கு மாடிவீடு, அது:

தான் என்னுடையது, பாருங்கள். பிட்சு : இருக்கட்டும், என்னை அழைத்த காரியத்தை

இன்னும் நீங்கள் கூறவே இல்லையே ஐயா!