பக்கம்:புத்த ஞாயிறு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 39.

பிட்சு : மிக்க மகிழ்ச்சி இளைஞனே! உன்னுடைய இந்த மாற்றம் எனக்குப் பெரிதும் மகிழ்ச்சியை அளிக்கிறது. உடம்பின் வலிமையைக் காட்டுகின்ற யானையேற்றம், குதிரையேற்றம், விற்போர், மற்போர், வாட்போரில் வல்லவகை அன்று பல ஆண்டுகளுக்கு முன் என்னெதிரே வந்து நின்ரு ய் நீ. இன்ருே துக்கம், துக்கோற்பத்தி, துக்க நிவாரணம், ஆகிய ஞான வித்தைகளைக் கற்ற சத்பாத்திரமாக என் முன் வந்து பிட்சுவாகி நிற்கிருய்! என்னுடைய ஒரு கேள்வி உன்னை இப்படி ஒர் ஆன்மவீரனுக மாற்றியிருக்கிற தென்பதை அறிந்து உண்மையிலேயே நான் பெருமிதப் படுகிறேன்.

வாலிப : என் மனத்தில் இன்னும் பல தெளிவுகள் ஏற்பட வேண்டுமென்று என்னை வாழ்த்துங்கள் அடிகளே! உங்கள் வாழ்த்து என்னை வளர்க்கும்-என் அறிவைப் பெருக்கும் என்று நான் கம்புகிறேன்.

பிட்சு : புத்தர் பெருமானுடைய அருள் உனக்குப் பரி பூரணமாகக் கிடைக்கட்டும். புத்தம் சரணம் கச்சாமி, தர்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி. (கூடியிருந்த அனைவரும் இப்படியே கூறுகிருர்கள்)

(திரை) காட்சி-10 இடம்:-நகரின் ஒரு சதுக்கம்

(வாலிபனை அனுப்பிவிட்டுப் புத்த பிட்சு தனக்குத் தானே பேசிக்கொள்கிருர்)

பிட்சு: அ ட டா ! இத் த னே ஆண்டுகளுக்குள்தான் எவ்வளவு மாறுதல்கள்? நான் சந்தித்தவர்கள் ஒவ் வொருவரும் எப்படி எப்படியோ மாறியிருக்கிருர்கள். ஒரு காலத்தில் சிறிதும் தணியாத வெறியோடு என் னிடம் புத்த நெறியை எதிர்த்துக் கேள்விகேட்ட இந்த இளைஞன் இன்று புத்த நெறியைப் போதிக்கும் பிட்சுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புத்த_ஞாயிறு.pdf/41&oldid=597404" இலிருந்து மீள்விக்கப்பட்டது