பக்கம்:புத்த ஞாயிறு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 புத்த ஞாயிறு.

களில் ஒருவனகி விட்டான். விந்தையான உலகந்தான் , இந்த உலகில் வெயில் மழை ஆகிய பருவ காலங்கள் தான் மாறி மாறி வருகின்றன என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனல் மனிதர்களும் மாறி வரு கிரு.ர்கள். ஆ... இதோ தெருக்கோடியில் ஏதோ கூட்டமாகத் தெரிகிறது. என்னவென்றுதான் போய்ப் பார்க்கலாமே? (கூட்டத்தில் சலசலப்பு-பல குரல்கள்-அருவருப்புக் குரல்கள் ச்சூ என்று வெறுத்து இரங்கும் குரல்கள்) குரல்: வழிவிடுங்கள்! வழிவிடுங்கள் புத்த பிட்சு வருகிரு.ர். பிட்சு: யார்? என்ன? எதற்காக இந்தக் கூட்டம்: மக்கள் (பலகுரல்கள்) பாவம் தொழுநோய் வேதனையில் நடக்க முடியாமல் விழுந்து கிடக்கிருள். எல்லாரும். தொடுவதற்குக் கூசுகிருர்கள். நோய் முற்றிவிட்டது. உடலின் பல பகுதிகள் குறைந்து குன்றிப் போய்விட்டன. முகத்தைப் பார்த்தால் இளம்வயதுப் பெண்ணென்றுதான் தெரிகிறது. ஆனல் ஏன் இந்தவயதிலேயே இந்தப் பாழும் நோய் வந்தது இவளுக்கு? பிட்க: ஆ இந்தப் பெண்ணை எங்கோ எப்போதோ பார்த்த நினைவாக இருக்கிறதே...? எங்கே, எப்போது பார்த்தேன்? - (சில விடிைகள் யோசனை-நினைவைப் பின் நோக்கிச் செலுத்துகிருர் பிட்சு) . பிட்சு : ஒ! நினைவு வருகிறது. நீண்ட நாட்களுக்கு முன் இந்தத் தெருவிற்கு அடுத்த கணிகையர் வீதி வழியாக நான் போய்க் கொண்டிருந்தபோது কাটো স্ট্রষ্ঠা வழி மறித்து மயக்க முயன்ற பெண் அல்லவா இவள்? (வாரீர்-என் அழகைப் பாரீர்-வடிவழகைப் பாரீர்என்ற அவளது பழைய இசை பிட்சுவின் காதில் ஒலித்துப் பழைய நினைவை உண்டாக்குகிறது)

(அருகில் நெருங்குகிருர்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புத்த_ஞாயிறு.pdf/42&oldid=597405" இலிருந்து மீள்விக்கப்பட்டது