பக்கம்:புத்த ஞாயிறு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 43

பிட்சு : அழாதே பெண்ணே! இதுதான் உலகம். அன்று எல்லாரும் என்னைத் தொட்டு உதவி புரிய ஆசைப்படும் படி நீ இருந்தாய். இன்ருே உன்னைத் தொடுவதற்கு நான் மட்டுமே தயாராக இருக்கிறேன். உலகை, இனியாவது புரிந்துகொள். வா. உன்னைக் கைத்தாங்க லாக உன் வீட்டிற்கு அழைத்துச் செல்லுகிறேன். இந்திரவிழாக் கூட்டத்திலே இப்படித் தெருவில் விழுந்து கிடப்பது நல்ல தில்லை. உன்னே யாராவது மிதித்து விட்டுப் போய்விடுவார்கள். தேர்கள், குதிரைகள், யானைகள், எல்லாம் அதிகமாகப் போகும் இந்த வீதியில் இப்படி நடுத்தெருவில் நீ அநாதையாய்க் கிடப்பது கூடாது!

கணிகை . அழிந்தொழியப் போகிற உடல் எங்கே கிடந் தால் என்ன? எப்படிக் கிடந்தால் என்ன? வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன்' என்கிறீர்கள். எனக்கு இப் போது வீடும் இல்லை. வாசலுமில்லை. என்னை நீங்கள் எங்குமே அழைத்துச் செல்ல முடியாது.

பிட்சு : வீடு, வாசல், இல்லாவிட்டால் என்ன? எப்போதும், எல்லாருக்கும், உலக அறவியின் வாயில் திறந்தே கிடக்கிறது. உலக அறவியின் உள்ளே உன்னைப் பாதுகாப்பாகக் கொண்டு போய்ச் சேர்க்கிறேன், வர் போகலாம். - . - - . கணிகை : வேண்டாம்! இந்தப் பாவியை விட்டு விடுங்கள். நான் தெருவிலேயே கிடந்து சாகவேண்டும். அப் போதுதான். எனக்குப் புத்திவரும். என்னைத் தொட் உங்கள் கைகள் அருவருக்கவில்லையா? என்ன ஏறிட்டு நோக்க உங்கள் கண்கள் கூசவில்லையா? என்னைத் தொடுவதின் மூலம் பயங்கரமான இந்த நோயை அணுகாதீர்கள். • . . . . . . .” பிட்சு : நான் துறவி எனக்கு விருப்பு வெறுப்பில்லே! உடம்பிலே சந்தனமும், பன்னீரும், மணக்க நீ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புத்த_ஞாயிறு.pdf/45&oldid=597408" இலிருந்து மீள்விக்கப்பட்டது