பக்கம்:புத்த ஞாயிறு.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தா. பார்த்தசாரதி 45

காட்சி - 11 இடம்:-உலக அறவி

(மூத்த பிட்சு நீண்ட நாட்களாக இளைய பிட்சு வைக் காண முடியாமல் உலக அறவிக்குத் தேடிவரு கிரு.ர். வைகாசி-விசாகத்திற்கு நாட்கள் நெருங்குவ தால்-அவர் வராதது மூத்தவருக்கு வியப்பை அளிக் கிறது. எனவே அவர் தற்செயலாக இளையவரைத் தேடி உலக அறவிக்கு வருகிருர்) மூத்தபிட்சு : (தனக்குத்தானே) வைகாசி விசாக யாத்திரை யாக மணிபல்லவம் போகவேண்டும் போகவேண்டும் என்று அலைந்து கொண்டிருந்த இந்த பிட்சுவை எங்கு தேடியும் பலநாட்களாகக் காணவே இல்லையே-இந்த உலக அறவியின் அம்பலத்திற்குள்ளாவது இருக்கிரு.ரா... பார்க்கலாம். ஆ அதோ அந்தத் தொழுநோயாளிப் பெண்ணுக்கு அருகே அமர்ந்து பணிவிடை செய்து கொண்டிருப்பது... யார்...? ஆம்... அவரேதான்... அருகில்நெருங்கிப் போய் என்னவென்று விசாரிக்கலாம். (இதற்குள் இவரை அவரே பார்க்கிருர்)

பிட்சு வாருங்கள்! வாருங்கள்! நான் பல நாட்களாக உங்களைக் காண இந்திரவிகாரத்துப் பக்கம் வரவே முடியாமல் போய்விட்டது. காரணம்.இங்கே இந்தத் தொழுநோயாளிக்குப் பணிவிடை செய்யும் வேலை புதிதாக எனக்கு வந்துவிட்டது.என்னை மன்னியுங்கள்.

முதிய : நாட்கள் நெருங்குகின்றனவே! இம்முறை நீர் மணிபல்லவ யாத்திரை போகப் போவதில்லையா? கோமுகி தரிசனம் செய்யப் போவதில்லையா? உம்மைப் போகவிடுவதென்று நான் முடிவு செய்துவிட்டேன். அதற்காகவே இப்போது இங்கே தேடியும் வந்தேன்.

பிட்சு : மன்னிக்க வேண்டும் அடிகளே! இவ்வளவு காலம்

நான் யாத்திரை போகவும் எனக்குப் புண்ணியம்