பக்கம்:புத்த ஞாயிறு.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முன்னுரை

நாடகம் என்னும் சொல் வழக்கு மிகப் பழைய தமிழ் நூல்களிலேயே காணப்படுகிறது. முத்தமிழில் ஒன்ருகிய நாடகத் தமிழ் ஒருகாலத்தில் நம் ழொழியில் மிகச் சிறப் பாக விளங்கியிருக்கின்றது என்பதனைச் சிலப்பதிகார அடியார்க்கு நல்லார் உரைமூலமும், பிற வரலாற்று இலக்கி யக்குறிப்புக்களின் மூலமும் தெள்ளிதின் உணர முடிகிறது. 'நாடகவழக்கினும் உலகியல் வழக்கினும் (தொல்:பொருள்) என வரும் தொல்காப்பிய நூற்பாவிலிருந்து இச்சொல் வழக்கின் தொன்மை புலனுகிறது. நாடகம் என்ற ஒரு கலை ஏன் தோன்றியது என்ற வின எழுந்தால் பயனுள்ள விடை கிடைக்கக் கூடும்.

தன்னுடைய வாழ்க்கைய்ையும், அதில் மலிந்து கிடக் கும் பல்லாயிரம் உணர்ச்சியலைகளையும் தன்னிலிருந்து பிரித்து வேறுபடுத்திக் கலையாக நிறுவிப் பார்க்க வேண்டு மென்ற ஆசைதான் அது. தன் முகத்தை அடிக்கடி கண் குடியில் அழகு பார்த்துக்கொள்வது போல் வாழ்க்கையை அரங்கத்தில் பார்க்க வேண்டும்-வாழ்வதுபோல் நடித்துப் பார்க்க வேண்டும். என்ற ஆசை ஏற்பட்டது. அவ்வாறு அரங்கத்தில் நடிக்கப்படும் வாழ்க்கை, உலகத்தில்வாழ்கின்ற நடைமுறைவாழ்வைக் காட்டிலும் தரமாய் வீறுமிக்கதாய்ச் சுவைபயப்பதாய் இருக்கவேண்டுமென்று எதிர்பார்க்கப்பட் டது. நடிப்பவர்களுக்குப் புகழும், காண்பவர்களுக்குச் சுவை யும். தரக்கூடிய சிறந்த வாழ்க்கையை மேடையிற் சித்தரிக்க விரும்பின்ை மனிதன். வாழ்வில் இருந்துகொண்டே வாழ் வின் உணர்ச்சிகளை வேருகப் பிரித்து மேடையில் நடித்து அழகு பார்க்கும் இந்தப் புதிய விருப்பத்தால் மனிதனுக்குச் சில வசதிகள் கிடைத்தன. துன்பப்படுகிறவன் இன்பத்தின் சிகரத்தை நடிக்கவும், காணவும் முடிந்தது. மாறுபட்ட உணர்ச்சி நளினங்களை வேறுபட்ட மனிதர்கள் ஒரிடத்தில் ஒர் அரங்கில் ஒரு சேரக் காண முடிந்தது. இதல்ை